வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு மீட்பு –

0
151

திருகோணமலை உப்புவெளி கன்னியா – சர்தாபுர வீதி, கிளிகுஞ்சிமலை வள்ளுவர் பருத்தி வீடமைப்பு வளாகத்தில் இன்று (04) வீதியோரத்தில் ஒரு வயதுடைய சிசு ஒன்று காணப்பட்ட நிலையில், அதனை மீட்ட காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்பகுதி மக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் தலைமை ஆய்வாளர் கே.எஸ்.லலித் குமார உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர் .

ஒரு துணியில் உரப் பையொன்றால் சுற்றப்பட்டு குழந்தை வைக்கப்பட்டிருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக, அருகில் இருந்த பெண் ஒருவர், காவல்துறையினர் வீட்டிற்கு வரும் வரை, மழையிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நன்கு வளர்ந்த குழந்தையாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உப்புவெளி காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக கட்டளைத் அதிகாரி டி.எச்.என்.ஜெயமாலி உட்பட பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் சிறுமியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தேவையான ஆடைகளை அணிவித்து திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உப்புவெளி காவல் நிலையப் பிரதான காவல்துறை பரிசோதகர் கே.எஸ்.லலித் குமாரவின் பணிப்புரையின் பேரில் சிறுவர் துஷ்பிரயோகப் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி, பெண் உப காவல்துறை பரிசோதகர் டி.எச்.எம்.ஜெயமாலி உள்ளிட்ட குழுவினர் குழந்தையின் தாயாரைக் கண்டுபிடிக்க விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் குழந்தையை காவல்துறையினர் கொண்டு வந்ததையடுத்து மூன்று தாய்மார்கள் குழந்தையை தாம் தத்தெடுப்பதாக காவல்நிலையம் வர, மேலும் இருவர் காவல்துறையினரிடம் தொலைபேசியில் பேசி குழந்தையை தத்தெடுப்பதாக கோரியுள்ளனர். நீதிமன்றத்தின் ஊடாக கோரிக்கையை முன்வைக்குமாறு தாய்மார்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here