இவ் வருட ஜனாதிபதி தேர்தலில் தம்மீதும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து பிரஜைகளுக்கும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நன்றிகளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
கடந்த எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட 6.9 மில்லியன் மக்களின் ஆணையினால் ஜனாதிபதி பதவி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அபிவிருத்தியடைந்த நாடு என்ற தொலைநோக்குப் பார்வை நனவாகும் போது பொதுஜன பெரமுனவின் பலத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரளவு வெற்றிகளை பதிவு செய்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளராக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தனது முயற்சிகள் சேறுபூசுதல் மற்றும் வெற்று வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாரேனும் தங்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பினால், அதில் இருந்து பாடம் கற்று மீண்டும் சவாலுக்கு முகங்கொடுக்க முழுமையாக தயாராக வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.