வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு விசேட அறிவிப்பு!

0
115

இலங்கையில் சட்டவிரோதமான உண்டியல் பரிமாற்றம் வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த கூட்டு சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்று முன்தினம் மாற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெப்பிலியான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 50,000 யூரோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் சந்தேகநபர்கள் பணம் எவ்வாறு சம்பாதித்தார்கள் அல்லது எவ்வாறு கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதேவேளை, கடந்த 14ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 47,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் இவ்வாறான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை முழுமையாக முறியடிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை புறக்கோட்டை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நேரடியாக மத்திய வங்கிக்கு பணம் செல்லும் முறையில் இலங்கைக்கு பணம் அனுப்புமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ல அதேவேளை , உண்டியல் முறையில் பணம் அனுப்பினால் அது உரியவர்களை சென்றடையாதென அறிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here