கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி வேலுகுமார் மீது இதொகாவினர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர் என மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளாரார்
புஸ்ஸல்லாவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (22.04.2024) அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது இதொகாவின் கட்டுக்கடங்காத குண்டர்களுடன் மூத்த துணைத்தலைவர் மற்றும் அவரது கோஸ்டியினர் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமார் மீது புஸ்ஸல்லாவையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கூட்டாளிகளை கண்டிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.