வைத்தியசாலையின் அசமந்த போக்கால் பலியான பச்சிளம் சிசு- தாய் பரிதவிப்பு

0
132

வவுனியா (Vavuniya) பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயொருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வைத்தியசாலைகளில் உள்ள நிர்வாகத்தினரின் அசமந்த போக்குடைய செயற்பாடானது முற்றுப்பெறாது தொடர்கின்றமை பல்வேறு உயிர்களை காவு கொண்டுள்ளது.அவ்வாறான செயற்பாட்டின் தொடர்ச்சியே வவுனியா பொது வைத்தியசாலையிலும் அரங்கேறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு பல தடவை வைத்தியர்களிடம் கோரிய போதும் அதனை பொருட்படுத்தாமல் வைத்தியர்கள் செயற்பட்டமையினால் தனது சிசு இறந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு, இன்று மட்டிலும் குழந்தையை வைத்தியர்கள் பெற்றோரிடம் காண்பிக்கவில்லையெனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.மேலும், அண்மையில் மன்னார் (Mannar) வைத்தியசாலையில் இளம் கர்ப்பிணி தாயொருவர் வைத்தியர்களினால் சரியான சிகிச்சை வழங்காமல் உயிரிழந்த நிலையில் தற்பொழுது இடம்பெற்றுள்ள சம்பவமும் வைத்தியர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலையை உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here