அட்டன்,நோர்வூட் பகுதிகளில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள்

0
94

மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள்;;; இன்று அதிகாலை முதல்; அட்டன் ;மற்றும் நோர்வூட் பகுதிகளில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இன்றைய தினம்; ஹட்டன் சிபெட்கோ எண்ணை நிரப்பு நிலையமொன்றிற்கு மண்ணெண்ணை வருவதாக கேள்வியுற்ற மக்க்ள் மண்ணெண்ணை கொள்கலன்களை வைத்து கொண்டு நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த பல மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டதன் காரணமாக அதிகமானவர்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாற்றம் பெற்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக எண்ணெய் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எண்ணெய் பெற்றுக்கொள்ளப்படுவதன் காரணமாகவும் இவ்வாறு மண்ணெண்ணெய் வரிசைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக பலர் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை கைவிட்டு எண்ணெய்க்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் இதனை உணர்ந்து பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய முறையில் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here