உலகநாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்க ஈரானுக்கு அனுமதி!

0
48

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் நேற்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் வினியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை, நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக மூடிக்கிடந்த இந்த கடல்வழிப் பாதையில், போர் ஏற்படுவதற்கு முந்தைய நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளநிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் மூலம் ஈரான் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்கலாம். இந்தியாவிற்கு, ஹார்முஸ் நீரிணை திறப்பு மிகப்பெரிய பொருளாதார நிம்மதியை அளிக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வரவேற்றுள்ளது.

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கியதால் கச்சா எண்ணெய் விலை சரியத்தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here