“கருடனுக்கு” வயது எட்டு!

0
84

மலையகத்துக்கு தனியாக ஒரு ஊடகம் அமையப்பெறவேண்டும் என்ற சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்ட இணையதள ஊடகமாகும். தற்போது 70 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து நாடு கடந்து பரவி விரிந்துள்ளது. இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மலையாகசார்ந்த பல இணையத்தளங்கள் உருவாகியிருந்தாலும் அதற்கு ஆரம்ப புள்ளியாக “கருடன் ” காரணமாகவிருந்தமையிட்டு நாம் பெருமைக்கொள்கின்றோம்.

மத்தியகிழக்கில் வாழும் மலையக உறவுகள் மிகவும் ஆர்வமாக “கருடன்” செய்திகளை பார்ப்பதை அவதானிக்கின்றோம். எந்தவிதமான வணிக நோக்கமின்றி இத்தனை காலம் கருடன் பயணித்துள்ளது என்பதோடு தொடர்ந்தும் செய்திகளை உள்ளபடி உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்று தெரிவிப்பதோடு தொடர்ந்தும் மலையக செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசகர்களுக்கு நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here