நுவரெலியாவில் மலிவான விலையில் உணவு விற்பனை செய்ய தீர்மானம்

0
87

நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் பிரதான நகரமாக காணப்படுகின்றது இருந்தும் ஹோட்டல்களில் உணவுகளின் விலைகளை சற்று விலை கூட்டி விற்பனை செய்கின்றன இதனால் நுவரெலியா ஏகாதிபத்திய வியாபார சங்கத்தின் தலைவர் , அமைப்புக்குழு உறுப்பினர்கள் , நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் , நகரசபை முதல்வர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் விசேட கூற்றம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன.

இவ் கூட்டத்தின் போது நுவரெலியாவில் பிரபலமான ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிறு வியாபார உரிமையாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர் . இதன் மூலம் நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாதம் ஒரு முறை மிகவும் மலிவான விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என ஆரம்பித்த இக்கூட்டத்தில் வெற்றிகரமான முடிவு எடுக்கப்பட்டது இதனை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார். ஆகையால் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நுவரெலியா BOC வங்கிக்கு முன்பாக உள்ள நகரசபை வாகன தரிப்பிடத்தில் சிறு கூடாரங்கள் அமைத்து அந்த இடங்களிலே உணவகங்களை அமைத்து அனைத்து வகையான உணவு வகைகளை சமைத்து மாதம் ஒருமுறை விற்பனை செய்ய நுவரெலியா வியாபார சங்கமும் தீர்மானித்துள்ளது. இதனை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நுவரெலியா மாநகரசபை முதல்வர் என பலரும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது . இவ்விடயம் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவருக்கும் சிறந்த ஒரு சேவையாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது இது வேறு மாவட்டங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் இத்தீர்மானம் நுவரெலியாவில் ஹோட்டல்களில் அதிக விலைக்கு உணவுகளை விற்பனை செய்தமையால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்.

 

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here