தரமற்ற கோதுமை மா வழங்கும் தோட்ட நிர்வாகம்.ஸ்டொக்கம் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.

0
92

ஹொரண பிளான்டேஷனுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்ட்ட கோதுமை மாவில் ரொட்டி சுட முடியாத நிலையும் அதேபோல கோதுமை மாவின் நிறம் கருமையான நிறத்தில் காலாவதியான கோதுமை மா போல காணப்படுவதாகவும் உண்ணும் போது ஒருவகையான மணம் வீசுவதாகவும் ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகையில் மாதம் ஒருமுறை தோட்ட நிர்வாகத்தால் சம்பளத்தில் ஒரு தொகை அறவிடப்பட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங்கபடுகின்றது.அவ்வாறு வழங்கப்படும் கோதுமை மா கருமை நிறத்திலும் ரொட்டி சுடும் போது ஒருவகையான மணம் வீசுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தோட்டத்தொழிலாளர்களின் பெரும்பாலும் அன்றாட உணவாக ரொட்டியே காணப்படுகின்றது.இவ்வாறு இருக்கையில் இவ்வாறான தரமற்ற கோதுமை மாவை தருவதால் அதில் ரொட்டி சுட்டு உண்ணும் போது ஒவ்வாமையும் அதே நேரத்தில் வேலைத்தளத்துக்கு கொண்டு செல்லும் போது பழுதடைந்த துர்நாற்றமும் வீசுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.இதை தட்டி கேட்ட போது இம்மாதம் ஸ்டொக்கம் தோட்டத்தில் மாத்திரம் கோதுமை மா வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.எனவே தரமான கோதுமை மாவை வழங்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென ஸ்டொக்கம் தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here