திகாம்பரத்தின் அமைச்சுக்கு பாராளுமன்றில் சிறந்த நிதி செயலாற்றுகை விருது!

0
101

பாராளுமன்றத்தின் அரசாங்க பொதுகணக்குகள் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டின் நிதிக்கட்டுப்பாடு பற்றிய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுகை தொடர்பில் திருப்திகரமான பெறுபேற்றினை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தேசிய விருது வழங்கும் வைபவத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் சிறந்த நிதிச் செயலாற்றுகைக்காக வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

unnamed

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பாராளுமன்ற குழு அறையில் (13/11) இடம்பெற்ற தேசிய விருது வழங்கும் விழாவிலேயே மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களில் அமைச்சின் சார்பில் அதன் செயலாளர் திருமதி ரஞ்சணி நடராஜபிள்ளை விருதினையும் சான்றிதiழையும் பெற்றுக்கொண்டார்.

2015ம் ஆண்டில் அரச பொது நிறுவனங்கள் அமைச்சுக்களின் நிதியியல் செயலாற்றுகையை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலையியற் குழுவான அரச பொதுகணக்குகளுக்கான குழு (கோப்) சுமார் 831 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றுள் சுமார் 80 நிறுவனங்களுக்கு தங்கம் வெள்ளி விருதுகளுடன் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தது.

திணைக்களங்கள், உள்ளுராட்சி சபைகள், கூட்டுத்தாபனங்கள் சபைகள், பிரதமர் அலுவலகம் என பல தரப்பட்ட அரச நிறுவனங்கள் விருதுகைளைப் பெற்றுக்கொண்ட இந்த நிகழ்வில் மலைநாட்டு பதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு வெள்ளி விருதுக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு அமைச்சர் பழனி திகாம்பரம் முதன் முறையாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பொறுப்பேற்ற குறிப்பிட்ட அமைச்சு மலைநாட்டில் புதிய கிராமங்களை அமைப்பதனையும் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி;பணிகளையும் மேற்கொள்வதையும் குறிக்கோளாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here