பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய உற்பத்தி முறை பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன.

0
280

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால் உள்ளூர் உற்பத்தி முறை என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உற்பத்தி முறை பெருந்தோட்டப் பகுதியில் பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.

பிரிடோ நிறுவனத்தின் வேண்டுகோளுக்கமைய பேராசிரியர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ் அவர்களும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று டிக்கோயா நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …..

குறித்த ஆய்வு இந்த புதிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விடயத்தினை மீளாய்வு செய்வது இதன் தோட்டத் தொழிலாளர்களிடையே அல்லது சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் தோட்டத் தொழிலாளர்களுடைய கருத்துக்கள் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் போன்றன குறித்த ஆய்வின் நோக்காக கொண்டுள்ளன.

குறித்த வெளியார் உற்பத்தி முறையென்பது கருத்தியல் அடிப்படையில் வேறுபட்டதாகவும் உள்ளூர் உற்பத்தியின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்த முறை ஒரு முறையாக சட்டரீதியாக மேற்கொள்ளப்படவில்லை முழுமைப்படுத்தப்பட்ட ஒரு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையும், வெவ்வேறு தோட்டங்களில் வெவ்வேறு முறைகளில் கையால்வதும் பாரிய முரண்பாடாக காணப்படுகின்றன.

இதற்கென்று ஒரு சட்டவரையறையில்லை கொடுக்கப்படுகின்ற ஒப்பந்த காலாமும் மிகவும் குறைவானது. வேண்டிய நேரத்தில் ஒப்பந்தத்தை இரத்தச் செய்யக்கூடிய நிலையும் காணப்படுகின்றன. அவர்களின் உற்பத்திக்கு கொடுக்கப்படுகின்ற விலைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. உற்பத்திக்கு பொருத்தமில்லாத காணிகளும் தேயிலை மரங்களுமே பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. அதனால் அவர்களின் வருமானம் உறுதி செய்து கொள்ள முடியாத நிலையே உள்ளன.

ஆகவே பெருந்தோட்ட சமூகத்தின் நீண்ட கால தீர்வாக தேயிலை சிற்றுடைமை முறைமையினை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதில் ஆகக்குறைந்தது இரண்டு ஏக்கர் காணியில் உள்ள தேயிலையினை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து சிறு விவசாயிகளாக மாற்றுவது மிகவும் பொருத்தமானது. சிற்றுடைமையாக்குவதற்கு காலம் எடுக்கும் பட்சத்தில் தற்போது உள்ள முறைமையினை முத்தரப்பு அரசாங்கம் தொழிற்சங்கம் கம்பனிகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அதில் ஐந்து அல்லது பத்து வருடம் ஒப்பந்த காலம் காணப்பட வேண்டும் விலை தீர்மானிக்கின்ற உரிமை காணிகளை விருத்தி செய்த பின் தோட்ட கம்பனிகள் உடன் மீள பெற முடியாத வரையறைகள் காணப்பட வேண்டும் அதே நேரம் தற்போது இருக்கின்ற 1500 என்ற தேயிலை மரங்கள் பதிலாக நில அடிப்படையில் வழங்குதல் வேண்டும். அத்தோடு உற்பத்தி நிலத்தினை தவிர இவர்களுக்கு வாழ்விடத்தை அமைத்து கொள்வதற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்கு பிரிடோ நிறுவனத்தின் உதவி நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.கே. சந்திரசேகரன், தோட்ட சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அபிவிருத்தி குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here