லிஸ்டீரியா மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

0
75

லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் எனப்படும் பக்றீறியா தொற்றானது உணவு மற்றும் நீரின் மூலமும் பரவக்கூடிய ஒன்றாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில், சிறிய கடை ஒன்றை வைத்திருக்கும் பெண் ஒருவர் குறித்த லிஸ்டீரியா பக்றீறியாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, லிஸ்டீரியா பக்றீரியா தொற்று அறிகுறியுடைய சந்தேகத்தின் பெயரில் 15 வயது சிறுவன் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவனின் பாட்டி அண்மையில் சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் சிறுவனின் வீட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இருப்பினும், அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here