வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்திய அணி – இங்கிலாந்துடன் இன்று மோதல்!

0
3
dailythanthi

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 3-வது போட்டிகளை இங்கிலாந்து அணி வென்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் இந் தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இரு ஆட்டங்களில் சோபிக்காத 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இன்றைய ஆட்டத்திலாவது ரன்வேட்டை நடத்துவாரா என்பதை பார்க்கலாம். சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் என்பது கேள்விக்குறியே.

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் 5 ஆட்டங்களில் (4-ல் தோல்வி, ஒன்று மழையால் பாதியில் ரத்து) இந்தியா ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 1990-ம் ஆண்டு முகமது அசாருதீனுக்கு பிறகு தனது முதல் 5 ஆட்டங்களில் வெற்றி பெறாத இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தான். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று, கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவுசெய்ய ஸ்ரேயஸ் ஐயர் ஆர்வம் காட்டுவார். இரவு 10 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிப ரப்பு செய்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here