ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

0
100

புதிய நேர அட்டவணையின்படி களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் ரயில் இன்று (05) முதல் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனிவெளி புகையிரத பாதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வேக வரம்புகளினால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இந்த அட்டவணை அண்மையில் அறிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் புகையிரதங்கள் தடம்புரண்டு விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில், வீதிகளில் ஏற்படும் குறைபாடுகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில் அனைத்து ரயில் பாதைகளிலும் புதிய வேகத்தடைகளை விதிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக பிரதான ரயில் பாதை உட்பட அனைத்து வழித்தடங்களிலும் ரயில் தாமதம் ஏற்படுவது வழமையாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது தொடரும் ரயில் தாமதத்தை குறைப்பதற்காக களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களுக்கான புதிய நேர அட்டவணையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி இன்று முதல் புதிய அட்டவணை அமலுக்கு வருகிறது.

இதேவேளை, கடலோர ரயில்வேயின் திருத்தப்பட்ட ரயில் அட்டவணை இந்த வாரம் வெளியிடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here