அஸ்வின் படைத்த சாதனை -தமிழில் வாழ்த்திய சச்சின்

0
118

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 450வது விக்கெட்டை வீழ்த்தினார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 450 விக்கெட்டுகளை எட்டிய உலகின் இரண்டாவது டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் இந்த மைல்கல்லை எட்ட 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் முன்னணியில் இருப்பவர் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன். 80 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதற்கு முன், இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே, 2005ல் இந்த மைல்கல்லை எட்டினார்.இருப்பினும் அவர் 93 போட்டிகளிலேயே 450 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அஸ்வின் தற்போது டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும், சகலதுறை வீரர் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

இந்த நிலையில் அஸ்வினுக்கு இந்திய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , அற்புதமான மைல்கல் .. 450 விக்கெட் வீழ்த்தியதற்கு வாழ்த்துக்கள் அஸ்வின் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here