9 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 15 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர்.