சவுதி அரேபியாவில் இன்று ஒரேநாளில் கொலைக் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 81 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது உட்பட பல்வேறு குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் அறிவித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் அல்-கொய்தா, ஐ.எஸ் குழு மற்றும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.