6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்

0
185

வவுனியாவில் 6 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கி இருந்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீடடில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here