Home Blog Page 1169

இயக்குனரும், நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் (61) மாரடைப்பால் காலமானார்.

0

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானவர் R.N.R.மனோகர்.

ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் R. N. R. மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது R.N.R.மனோகர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

லிந்துல நாகசேனை தோட்ட குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

0

லிந்துலை நாகசேனை குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினரும் இ.தொ.கா உபத்தலைவருமான பழனி சக்திவேல் தலைமையில் இடம்பெற்றது.

தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆலோசணையில் லிந்துல நாகசேனை தோட்ட குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் முன்னாள் மத்தியமாகாணசபை உறுப்பினரும் இ.தொ.கா உபத்தலைவருமான பழனி சக்திவேல், அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ்.சச்சிதானந்தன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

நீலமேகம் பிரசாந்த்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடல்.

0

பாராளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது நாட்டில் நிலவும் தொடர் மழை,வெள்ளம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதானமாக பெருந்தோட்டத்துறை மக்களை சார்ந்தே அதிகமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை மாகாண ரீதியாக ஒவ்வொரு குழுவை அமைத்து இவ் விடயம் தொடர்பாக ஆராய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு காணியைப் பிரித்துக்கொடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம்.

அத்தோடு இக்கோக்கையினை ஏற்றுக்கொண்ட  பிரதமர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் காணி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கலந்துறையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அமைசர்களான சமல் ராஜபக்ஷ,  எஸ்.எம்.சந்திரசேன, ஜீவன் தொண்டமான் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

டி.சந்ரு

 

 

 

 

 

 

 

 

நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

0

நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா தயாரித்து, நடித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர்காடு சாலையில் அமைந்துள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில் பாதுகாப்பு ஏதும் கோரப்படாத நிலையில் உளவுத்துறை அறிக்கையின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி, நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ஆயுதப் படையைச் சேர்ந்த 5 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, ஜோதிகா மீது புகார்:

இதற்கிடையில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு எதிராக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது வன்னியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் பாமகவினர் அளித்த புகார் மனுவில், ‘‘சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 1995-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை தயாரித்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் நியூஸிலாந்துடன் டி 20 தொடர் இன்று ஆரம்பம்.

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் இந்த போட்டியை சந்திக்கிறது இந்திய அணி.

நியூஸிலாந்து அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

டி 20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் முடிவடைந்த இரு நாட்களில் நியூஸிலாந்து அணி, இந்திய தொடரை அணுகுவதால் கேப்டன் வில்லியம்சன் டி 20 தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிம் சவுதி இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்த உள்ளார்.

அதேவேளையில் இந்தத் தொடரில் இந்தியா டி 20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. மேலும் பயிற்சியாளராக ராகுல் திராவிட்டுக்கு இது முதல் தொடர் என்பதால் இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த கூட்டணியே 2022-ம் ஆண்டுஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க உள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஐபிஎல்தொடரில் சிறப்பாக செயல்பட்டவெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷால் படேல்,அவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மிதவேகப்பந்து வீச்சுஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக கருதப்படுகிறார். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல்மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

அணியில் தொடக்க வீரர்கள் மட்டும் 5 பேர் உள்ளனர். அனேகமாக இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஜோடியில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தனதுதிறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அஸ்வின் தனதுஇடத்தை தக்க வைத்துக்கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். டி 20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்வியின் காரணமாகவே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் வெடிகுண்டு மிரட்டல்

0

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமைக்காக நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த வெடி குண்டு அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வாயிலில் சந்தேக நபர் குறிப்பொன்றை வைத்துள்ளதாகவும் மேலதிக தகவல்களை குறிப்பிட்ட பஸ்லில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் கறுவாத்தோட்ட பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் தொட்டால் சுருங்கி இலை !!

0

தொட்டவுடன் தன்னை சுருக்கிக் கொள்ளக்கூடிய காந்த சக்தி தன்மை கொண்ட மூலிகை. இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தாலே மனோசக்தி அதிகரிக்கும்.

எகிப்தில் தேள்கள் கொட்டியதில் 3 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோர் காயம் !

0

எகிப்தில் தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதேச சபைச் சட்டத்திருத்ததை நடைமுறைப்படுத்த தெரியாத வரவு செலவுத் திட்டம் யாருக்கு ?

0

1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டப் பின்னரும் கூட அதனை உரிய முறையில் நடைமுறைக்கு கொண்டு வரத் தெரியாத பிரதேச சபை வரவு செலுவத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பயன் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருமணத்தின் போது மெட்டி அணிவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா??

0

நமது காலாச்சாரத்தில் மங்கை-கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், கல்யாணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த விஞ்ஞான காரணங்களும் இருக்கின்றன. நமது காலாச்சாரத்தில் மங்கை-கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், கல்யாணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது.