Home Blog

குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

0

அக்கரப்பத்தனை – ஊட்டுவள்ளி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – 2027 இல் பணிகள் நிறைவு

0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி செய்தியில், இந்த நோக்கத்திற்காக பல பகுதிகளில் நிலம் தயார் செய்யும் பணிகள் ஏற்கனவே இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் 2027 ஜனவரிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

லிந்துலையில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்த சாரதி கைது!

0

டீசலுடன் , மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி, சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிந்துலை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பாலித நந்தசிறி தெரிவித்தார்.

வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய லிந்துலை பொலிஸார் அதிரடியாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாரவூர்தி கண்டுபிடிக்கப்பட்டதாக பாலித நந்தசிறி தெரிவித்தார்.

பாரவூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டு அங்கிருந்து அறிக்கை பெறப்படும், மேலும் அந்த அறிக்கையுடன் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

0

 ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.

பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாத ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், உங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளும் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வரிகள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கும்.

எனவே இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார்

சுஜீவவுக்கு பிணை!

0

சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக ஒழுங்கு செய்யப்பட்ட சொகுசு வாகனம் பற்றிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

சேனசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், மனோ கணேசன், முஜிபுர் ரகுமான் உட்பட பலர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்திருந்தனர்.

பர்பியூம் நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலை அனுமதி!

0

வாசனை திரவியத்தை (perfume) நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர்   தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக புதன்கிழமை (16)  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின்   மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் உள்ள ஒரு முன்னணி தமிழ்ப் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன்  புதன்கிழமை (16) அன்று ஒரு வாசனை திரவியை  தனது தோழர்கள் மீது தெளித்துள்ளதாகவும், பின்னர் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும்  குறித்த மாணவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 இது தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரிடம் விசாரித்தபோது, 6 ஆம் வகுப்பு கள்வி கற்கும் மாணவன் ஒருவன் தலைவலிக்கு பயன்படுத்தப்படும் மருந்தை வாசனை திரவியம் என நினைத்து கொண்டு வந்து தனது வகுப்பு தோழர்கள்   மீது தெளித்துள்ளதாக  கூறினார்.

Alpha Blondy இலங்கைக்கு வருகை!

0

உலகப் புகழ்பெற்ற “ரெக்கே” இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி (Alpha Blondy) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி அபுதாபியிலிருந்து இன்று புதன்கிழமை (16) அதிகாலை 02.50  மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஆல்ஃபா பிளாண்டி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விமானப்படை மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாக மூன்று பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மேலும் வழக்கின் மேலதிக விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்!

0

இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலை பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாடும் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனா உறவுகளை இடைநிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள பிரான்செஸ்கா அல்பெனிஸ் தனியார் துறையினரும் இஸ்ரேலுடனான உறவுகளைதுண்டிப்பதை உலகநாடுகள் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பொருளாதாரம் தற்போது இனப்படுகொலையாக மாறியுள்ள ஆக்கிரமிப்பை தக்கவைப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கங்களும் தனிநபர்களும் என்ன செய்தார்கள் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் நாங்கள் அச்சத்தினால் பயத்தினால் பின்வாங்கினோமா அல்லது மனித கண்ணியத்தை பாதுகாக்க எழுந்தோமா என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்.

நீண்ட காலமாக சர்வதேச சட்டம் விருப்பத்தேர்வாகக் கருதப்படுகிறது – பலவீனமானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது சக்திவாய்ந்தவர்களாகச் செயல்படுபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த இரட்டைத் தரம் சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே அரித்துவிட்டது. அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்.

இங்கு பொகோட்டாவில் பல நாடுகள் மௌனத்தை கலைத்துஇ போதுபோதும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் போதும்இவெற்றுவார்த்தைகள் போதும்இவிதிவிலக்குவாதம் போதும்இஉடந்தையாகயிருத்தல் போதும்இஎன தெரிவிப்பதன் மூலம் சட்டப்பாதைக்கு திரும்புவதற்கான வழி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது – அனைவருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது சிலருக்கு வெறும் சலுகைகளை அல்ல மற்றவர்களை அழிப்பதன் இழப்பில்.என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சாசனம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் கருவிகள் அனைவரின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஆப்கானியர்களுக்கு அடைக்கலம்!

0

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததற்கு முன்னதாக பிரிட்டன் அரசுடன் இணைந்து பணியாற்றிய சுமார் 19,000 ஆப்கானியா்களின் தனிப்பட்ட தகவல்கள் 2022-இல் தவறுதலாக வெளியிடப்பட்டன.

அந்த தரவுத் தொகுப்பு, பின்னா் இணையத்தில் வெளியானதைத் தொடா்ந்து, அப்போதைய கன்சா்வேட்டிவ் அரசு அவா்களை மறுகுடியேற்றுவதற்கான இரகசிய திட்டத்தைத் தொடங்கியது. அது இரகசிய திட்டம் என்பதால் அதை பொதுவெளியில் தெரிவிப்பதற்கு அப்போதைய அரசு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய தொழிலாளா் கட்சி அரசு இந்த உத்தரவை நீக்கி, திட்டத்தை பொதுவெளியில் அறிவித்துள்ளது.

பிரிட்டன் படையுடன் இணைந்து செயல்பட்டவா்கள் குறித்த தகவல்கள் கசிந்ததாலும், அவா்களுக்கு தலிபானிடமிருந்து கூடுதல் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த இரகசிய திட்டத்தின் கீழ் 900 விண்ணப்பதாரா்கள் மற்றும் அவா்களது 3,600 குடும்ப உறுப்பினா்கள் உட்பட சுமார் 4,500 போ் பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். இந்த திட்டம் முடிவடைவதற்கு முன்னா் 6,900 போ் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.