Home Blog Page 1170

சமையல் எரி வாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு.

0

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம், இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சந்தையில் எரிவாயு விலை தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு சாத்தியம் என்பவற்றை மையமாக கொண்டு ‘கேஸ் மாபியா’ க்களின் செயற்பாடுகளும் அதிகரித்து செல்கின்றன.

எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பொது மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முடிவில்லா சீரற்ற காலநிலை தொடர்கிறது நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு.

0

நாட்டில்ல ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் முடிவற்ற தொடர் மழை பெய்து வருகிறது இதனால் கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (15) அதிகாலை முதல் 3 அங்குலம் வரை திறந்து விடப்பட்டுள்ளன.

இதே நேரம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று காலை திறக்கப்பட்டுள்ள் பகல் மூடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ச்சி நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான், விமலசுரேந்திர பொல்பிட்டிய உள்ளிட்ட பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகள் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் சீரற்றகாலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயும் தொடர்ந்து காணப்படுவதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கு வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளன.

கே.சுந்தரலிங்கம்.

அட்டன் சமூக நல நிறுவனத்தின் பரிசளிப்பு விழா

0

அட்டன் சமூக நல நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறுவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கலாசார நிகழ்வும் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் கலந்து கொண்டார்.

அட்டன் சமூக நல நிறுவனத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை பிரேம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் ! தீர்வு இல்லையேல் முன்னறிவித்தலின்றி போராட்டம்

0

அரச ஊழியர்களுக்கு 18,000 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும். இருவார காலத்திற்குள் தீர்வு இல்லாவிடின் முன்னறிவித்தலின்றிய வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0

நடிகர் விஜய் சம்மந்தமாக அவ்வப்போது சர்ச்சையாகவும், பரபரப்பாகவும் செய்திகள் இணையம் மற்றும் ஊடகங்களில் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சென்னை காவல்நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவரின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Google-இல் அதிகம் தேடப்பட்ட நாடுகள் – சுவாரசிய தகவல்

0

Google தேடல் தரவுகளின் பகுப்பாய்வில், வெளிநாட்டில் படிக்க விரும்பும் நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Remitly வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, கொலம்பியா முதல் இந்தியா வரை பலவகையான 36 நாடுகளில் உள்ளவர்கள், வெளிநாட்டில் படிக்கும் விருப்பத்துடன் மிகவும் தேடியது இலக்காக கனடா இருந்தது. இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம் என்று கூறுகிறது.

வாய்ப்புண்ணை குணமாக்க உதவும் மூலிகை வகைகள் என்ன…?

0

கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும். கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி, வாய்ப்புண் குணமாகும்.

நாளை முதல் வழமை போன்று சமையல் எரிவாயு விநியோகம்

0

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

தினமும் தோப்புக்கரணம் போடுவதால் இத்தனை பயன்களா…!!

0

தோப்பு கரணத்தை 100% ஒரே அழுத்தத்தில் செய்து விட முடியாது. ஆரம்ப காலத்தில் கடினமாக இருக்கும். பின்பு தான் இவை சரியான பழக்கத்திற்கு வரும்.

அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படாதுள்ள வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை

0

அரச பாடசாலைகளில் இதுவரையில் ஆரம்பிக்கப்படாதுள்ள வகுப்புகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.