அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்து தற்போது 21% முதல் 22% ஆகக் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்படுவதில் இன்னும் காலதாமதம் ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க இராணுவத்தை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் பெரும்பாலான ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் ஏவுதளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணையில் தற்போதுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவில் விரைவில் நடக்கவிருக்கும் இடைக்கால தேர்தல்களுக்கு முன்னதாக எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி என்பன கடுமையான உள்நாட்டு நெருக்கடியை சந்தித்து வருவதால் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




