கொழும்பில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட பல்கலை மாணவன் கைது

0
41

பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நேற்று முன்தினம் (5) விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.

நுரைச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இந்த இளைஞர் தொடரூந்து நிலையம் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டவேளை பம்பலப்பிட்டி ஓசன் டவர் கட்டடத்தில் அமைந்துள்ள விமானப்படை சோதனைச் சாவடியின் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாடும் வகையில் இந்த ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டதாக பல்கலைக்கழக மாணவனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.பல்கலைக்கழக மாணவனும் அவனது பிடியில் இருந்த டிரோனும் பம்பலப்பிட்டி காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here