தாமரை கோபுரத்தில் ‘கிறிஸ்துமஸ் கொழும்பு’ – அனுமதி இலவசம்

0
18

இலங்கை சுற்றுலா அமைச்சு , ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.888888888888

இலங்கை சுற்றுலா அமைச்சு , ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உணவு சந்தை , குளிர்பானக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் , இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் , டிஜேக்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரங்கம் ஆகிய அம்சங்களைக் இந்நிகழ்வு கொண்டிருக்கும்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியானது அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரே வளாகத்தில் பல இடங்களைக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

“கிறிஸ்துமஸ் கொழும்பு” நிகழ்வுக்கு நுழைவு இலவசம் எனவும் தாமரை கோபுரத்தை பார்வையிட வரும் அனைவரும் குறித்த நிகழ்விற்கு இலவச அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here