வைரஸ் காய்ச்சலால் தினமும் 60 முதல் 70 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் டெங்கு நோயாளர்களும் உள்ளடங்குவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிபுணர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
வைரஸ் காய்ச்சல், டெங்கு, கொரோனா ஆகிய மூன்று நோய்களும் தற்போது சமூகத்தில் பரவி வருவதால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.