இலங்கையில் தமிழ் கலைஞர் கைது – பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!

0
54
sritamil.ca

இலங்கையில் (Sri Lanka) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ், சங்கீத்சன் கணேஸ்குமார் (Sangeethsan Ganeskumar) என்ற 24 வயது இளம் தமிழ் ஹிப் ஹொப் கலைஞர் (Hiphop Sangee) ஜூன் 2  ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து கனடாவின் பிரம்டன் (Brampton) நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும் இசைக்காகவும் குற்றவாளியாக்கப்படுவது கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்” என்பதை  அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் (Tamil Genocide Monument) போன்ற திட்டங்கள் ஏன் அவசியமானவை என்பதை இச்சம்பவம் நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபையும் (Amnesty International) இந்தக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது,

அத்துடன், முறையான குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்த கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here