விசித்திர தோற்றத்தில் பிறந்த குழந்தை ~மிரண்டு போன மருத்துவர்கள்..

0
103

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு உடல் முழுவதும் அடர்த்தியான முடியுடன் கூடிய குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று முன்தினம் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையை கண்ட மருத்துவர்களும், செவிலியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ஏனெனில், அந்தக் குழந்தைக்கு உடலில் 60 சதவீதம் அளவுக்கு அடர்ந்த முடி இருந்துள்ளது. அதாவது, முதுகு பகுதி முழுவதும், முன்புறம் சிறிதளவு வரை அந்த முடி படர்ந்திருக்கிறது.

இந்நிலையில் குறித்த குழந்தையானது அரிய வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேவேளை குறித்த குழந்தையை அப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அந்தக் குழந்தையை தோல் நோய் மருத்துவர் இக்ராம் ஹுசேன் பரிசோதனை செய்தார். அப்போது இது ஒரு அரிய வகை குறைபாடு என்பது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர் இக்ராம் ஹுசேன் கூறுகையில்,

“தோலுக்கு நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகளில் ஏற்படும் அரிய வகை குறைபாட்டால் அந்தக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் “Giant congenitial melanocytic nevus” எனக் கூறுவார்கள்.

இது மிகவும் அரிய வகை குறைபாடு. உலக அளவில் பிறக்கும் 50,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. உடலில் இருக்கும் இந்தக் கரும்படலம் வெறும் நிறம் மட்டுமல்ல.

அது ஒரு ‘பேட்ச்’ (patch). அதாவது அது ஒரு கடினமான தோலை போன்று இருக்கும். இது புற்றுநோய் இல்லை என்ற போதிலும், இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு நாளடைவில் இது தோல் புற்றுநோயாக மாற சிறிதளவு வாய்ப்பு இருக்கிறது.

மேலும், இந்த ‘பேட்ச்’ முதுகெலும்பை அழுத்துவதால் மூளையும் அழுத்தத்திற்கு உள்ளாகும. இதனால் தலைவலி, வாந்தி, நடப்பதில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் ஏற்படும்” என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here