Home Blog Page 2

பிசாசு பொம்கைகள் – அமெரிக்காவில் அச்சம்!

0

மனித தோலைப் போல தெரியும் ஒரு டெடி பெர் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது அருகிலுள்ள மக்கள் மற்றும் பொலிஸாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

IFrameஇந்த பிசாசு பொம்மை சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பியர் வாலி சாலையில் உள்ள எரிபொருள் நிலையம் அருகே நடந்தது. அங்கு சாலையோரம் இருந்த டெடி பெர் ஒன்று, மனித தோல் வாரியாக உருக்கப்பட்டு அதன் மேல் தைத்தது போல் காணப்பட்டது. இதில் மனித உதடு, மூக்கு மற்றும் கண் வளையங்கள் போன்றவை கூர்மையான வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்தவர்கள் “இது ஒரு மனிதனின் தோலை உரித்துத் தயார் செய்தது போல உள்ளது” எனக் கூறினர்.

இது தொடர்பாக விசாரணை தொடங்கிய பொலிஸார், forensic ஆய்வாளர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின் நடந்த ஆய்வில், இந்த டெடி பெர் உண்மையில் மனித தோலால் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது ஒரு வகை லேடெக்ஸ் மற்றும் செயற்கை சதைத் துணி கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த டெடியைப் பற்றி தகவல் அறிந்த ‘Dark Seed Creations’ என்ற கலை நிறுவனம், இது தங்களது கலைமிகு தயாரிப்பு எனக் கூறியுள்ளது. ரோபர்ட் கெல்லி என்ற கலைஞர் இதனை Etsy என்ற இணையதளத்தில் விற்பனை செய்ததாகவும், இது விக்டர்வில்லே பகுதியில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். “இதில் நான் prank-இல் எதிலும் ஈடுபடவில்லை. வாடிக்கையாளரின் நோக்கங்கள் எனக்குத் தெரியவில்லை,” என அவர் கூறினார்.

IFrameஅத்துடன், இவர் செய்த உரையாடலில், “நாங்கள் பல விதமான பொருட்களில் மனித தோல்போல் தோன்றும் கலை வடிவங்களைச் செய்கிறோம். லேடெக்ஸ் கொண்டு உண்மையான தோலைப் போல உருவாக்கும் தொழில்நுட்பம் கொண்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

இந்த பிசாசு டெடி பெர் தற்போது அதிகாரிகளால் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடரமாட்டார்கள் என விவரம் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது போல செயற்கை தோலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து அரசு நெருக்கடி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கு திருமணம்!

0

திரையுலகில் `பலே வெள்ளையத்தேவா’ திரைப்படத்தின் மூலம் 2016ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன், தற்போது தனது திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

‘பென்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளரான கௌதம் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, அவருடன் லிப்-டு-லிப் முத்தம் இடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

தன்யா, சசிகுமாருடன் ‘பலே வெள்ளையத்தேவா’, அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’, உதயநிதியுடன் ‘நெஞ்சுக்கு நீதி’, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கில் நடித்த ‘ராஜா விக்ரமார்கா’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும், ரசிகர்களிடையே பரிச்சயத்தையும் ஏற்படுத்தியது.

ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் குடும்பக் கதாபாத்திரங்களில் அறிமுகமான தன்யா, தனது வாழ்க்கைத் துணையை தற்போது தெரிவுசெய்து, புதிய கட்டத்திற்கு செல்லும் முடிவை எடுத்திருக்கிறார் என்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு!

0

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதிஅமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்த இலங்கை இளம் அரசியல்வாதிகள் குழு!

0

இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல்வாதிகள் குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துள்ளது.

இரண்டு வார நிகழ்ச்சிக்காக இந்தக் குழு இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியின் தாக்கம் மற்றும் புதிய பிராந்திய கூட்டாண்மையை உருவாக்குவதில் இந்தியா எவ்வாறு வழிநடத்த முடியும் என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் குழு பாராட்டியது.

இதற்கிடையில், எதிர்கால பங்காளிகளாக இந்திய-இலங்கை கூட்டாண்மையில் தங்களுக்கு மதிப்புமிக்க பங்கு உண்டு என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை!

0

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ரயில் ஓட்டுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் முதல் படியாக, மருதானை, களுத்துறை, வெயாங்கொடை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் ரயில்களை சேவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்காததால், பயணிகள் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பிற்காக ரயில் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகளை அரசாங்கம் ஒரு தேசியப் பிரச்சினையாக கருதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரயில்களை இயக்குவதற்கான வண்ண சமிக்ஞை அமைப்பு ஆறு தசாப்தங்களுக்கும் மேலானது என்றும், வண்ண சமிக்ஞைகள் தற்போது கடுமையான பழுதடைந்துள்ளதாகவும், இதனால் ரயில் ஓட்டுநர்கள் தவறான சமிக்ஞைகளைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

0

மாத்தளை – தம்புல்கமுவவில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் கொலைக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வலுவற்றதாக்கும் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு திங்கட்கிழமை (14) அன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மகிந்த சமயவர்தன மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவின் அமர்வில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த மற்றொரு திகதியை வழங்குமாறு நீதிபதிகள் குழாமிடம் கோரிக்கை விடுத்தார்.

1999 ஆம் ஆண்டு மாத்தளை தம்புல்கமுவ பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தக் குற்றப்பத்திரிகைக்கு எதிராக ஜனக பண்டார தென்னகோன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தக் குற்றப்பத்திரிகை சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்து,

2020ஆம் ஆண்டு ரிட் உத்தரவைப் பிறப்பித்து, அதை செல்லாததாக்கியது. சட்டமா அதிபர் தனது சிறப்பு மேன்முறையீட்டு மனு மூலம், இந்தத் தீர்ப்பை சட்டத்திற்கு முரணான உத்தரவாக இரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை வெளியேற அறிவிப்பு!

0

அம்பாறை – ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

தங்கள் மீதான பகிடிவதை தொடர்பில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்த காணொளிகளை, பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான 04 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, சென்ற நோயாளர் காவு வண்டியின் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொறியியல் பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது, சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி!

0

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.

” தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் ஜனாதிபதி புடினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை . வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதி புடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார் ” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடுகளுடன் மிக நெருக்கமாக செயற்படுவதில் இலங்கைக்கு விருப்பம்!

0

2025–2026 காலப்பகுதியில் அமைதி காக்கும் முயற்சிகளில் ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட இலங்கை விரும்புவதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் (ஜூலை 11) நடைபெற்ற 32வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

இதன்போது ஆசியான் பிராந்திய மன்றத்தின் முக்கிய முன்னுரிமைகள், குறிப்பாக அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சகல விடயங்களையும் உள்ளடக்கிய பொருளாதாரச் செழுமையை மேம்படுத்துவதில் இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை அமைச்சர் ஹேரத் மீண்டும் வலியுறுத்தினார்.

தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் பகுதியொன்றாக, அமைச்சர் ஹேரத் 2025, ஜூலை 10 அன்று புத்ராஜயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மலேசியப் பிரதமர் மேதகு டத்தோ சேரி கலாநிதி அன்வர் பின் இப்ராஹிமை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்த பயனுறுதிமிக்க கலந்துரையாடலொன்று அவர்களிருவருக்குமிடையில் நடைபெற்றது.
குறிப்பாக, இலங்கை நாட்டினருக்கு வீசா இல்லாத பயணத்தை செயற்படுத்துவது மற்றும் மலேசியா முழுவதும் பல்வேறு துறைகளில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு 10,000 தொழில் ஒதுக்கீடுகளை மேற்கோள்வது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது பிரதமர், மனிதவள அமைச்சு மற்றும் மலேசியாவின் உள்துறை அமைச்சின் அதிகாரிகளிடம், இலங்கைத் தரப்போடு கலந்தாலோசித்து, தொழிலாளர் தொடர்பான விடயங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு அறிவுறுத்தினார்.

பிரதமர் இப்ராஹிமுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர் ஹேரத் மலேசிய மனிதவள அமைச்சின் பொதுச் செயலாளர், மலேசியாவின் உள்துறை அமைச்சின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கைத் தொழிலாளர்களின் நலனுக்காக முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை செயற்படுத்துவது தொடர்பிலும், வீசா இன்றிய பயண ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார். இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான முதல் பணிக்குழு 2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் நிறுவப்படும் என்றும், இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான வீசா விலக்கு துரிதப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான பரஸ்பர வீசா இன்றிய பயண ஏற்பாடு பரிசீலிக்கப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

2025, ஜூலை 11 அன்று கோலாலம்பூரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை முதலீட்டாளர், வர்த்தகம் மற்றும் சுற்றுலா மன்றம் 2025” இல் அமைச்சர் ஹேரத் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட மலேசியாவின் முக்கிய முதலீட்டாளர்கள், முன்னணி வர்த்தக சபைகள் மற்றும் போக்குவரத்துத்துறைப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர். மலேசியாவின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக்கான பிரதி அமைச்சரும் சிலாங்கூர் அரச குடும்பத்தவருமான மேன்மை தங்கிய டுங்கு மகா குனியன் திராஜா டுங்கு சைஃபன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2025, ஜூலை 12 அன்று, மலாக்காவில் உள்ள இஸ்தானாவில், மலாக்கா மாநிலத்தின் ஆளுநர் மேன்மை தங்கிய துன் சேரி சேத்தியா கலாநிதி ஹாஜி முகமது அலி பின் முகமது ரஸ்தம் ஐ அமைச்சர் ஹேரத் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இலங்கைக்கும் மலாக்கா மாநிலத்திற்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு பிரமுகர்களும் பயனுறுதிமிக்க கலந்துரையாடல்களை நிகழ்த்தினர். மலாக்கா நகரில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களையும் அமைச்சர் ஹேரத் பார்வையிட்டார்.

ஆசியான் பிராந்திய மன்றத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடனும், தென் கொரியாவின் முதல் துணை அமைச்சருடனும் கௌரவ அமைச்சர் ஹேரத் பல சந்திப்புகளை நிகழ்த்தினார்.

அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் திருமதி அலிசன் ஹூக்கருடன் நடைபெற்ற சந்திப்பில், இலங்கையின் ஏற்றுமதியில், குறிப்பாக ஆடையுற்பத்தித் துறையில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வரிகளைக் குறைப்பது குறித்த மேலதிகப் பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் ஹேரத் எடுத்துரைத்தார். இவ்விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சமரி ரோட்ரிகோ மற்றும் கோலாலம்பூரில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் திரு. எம்.ஐ. முகமது ரிஸ்வி ஆகியோர் கௌரவ அமைச்சருடன் சென்றிருந்தனர்.

மலேசியாவில் வேலை வாய்ப்பு!

0

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32 ஆவது ஆசியன் பிராந்திய மன்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார்.

அமைதி/பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார செழிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆசியன் பிராந்திய மன்றத்தின் முக்கிய முன்னுரிமைகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் உச்சிமாநாட்டில் வலியுறுத்தினார்.

2025-2026 காலகட்டத்தில் அமைதி காக்கும் முயற்சிகளில் ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடுகளுடன் இலங்கை மிகவும் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாநாட்டுடன் இணைந்து, அமைச்சர் விஜித ஹேரத் மலேசியப் பிரதமரையும் சந்தித்தார்.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டன.

இலங்கையர்களுக்கு பத்தாயிரம் வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மலேசிய மனிதவள அமைச்சகத்தின் பொதுச் செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடனும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார்.