Home Blog Page 1604

நிர்வாகிகளின் அக்கறையின்மையால் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள தலவாக்கலை ஓக்ஸ்போட் மக்கள்!

0

மலையகத்தில் சுத்தமான குடிநீர் பெறக்கூடிய வசதிகள் இருக்கின்ற போதிலும்  இம்மக்கள் இன்னும் குடிநீர் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து வருவது வேதனை குறிய விடயமே.

இன்று நாட்டில் உள்ள நகரங்களில் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களக்கு குடிநீர் தட்டுபாடாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் சுத்தமான குடிநீரே கிடைக்கபடுகின்றது.

ஆனால் மலையக பகுதிகளில் அதிகமான வளங்கள் இருக்கின்றபோதிலும் இம்மக்கள் தங்களின் தாகத்தினை தீர்ப்பதுக்காக ஒரு குடம் குடி நீர்க்காக பல மணி நேரம் காத்துகிடப்பதை யாரிடம் சொல்வது.

மலையகம் என்றாளே நீர் வளம் நிரம்பியபகுதி இங்கு பெறப்படுகின்ற நீரினை சுத்திகரிக்கபட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டு அதிக விலைக்கு நகரங்களில் விற்பனை செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

இதற்கான தொழிற்சாலைகளும் இயங்கிவருவதினை அவதானிக்கமுடியூம் அத்தோடு பாராளுமன்றத்தில் நீர்பாசன அமைச்சும் தனியாக உள்ளதுடன்  இத்திட்டத்தினை அவதானிக்க அதிகமான அதிகாரிகளும் செயல்படுகின்றனர்

மலையகத்தில் சுத்தமான நீருக்கு பதிலாக சேறுகலந்த நீரினை பருகவேண்டிய துர்பாக்கிய நிலை தொடர்கின்றது. தலவாக்கலை ஓக்ஸ்போட் தோட்டத்தில் 150 இற்கு மேற்பட்ட    மக்கள் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் வீடுகள் இன்றி தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

பாதை மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது இப்பிரச்சினை ஒரு புறம் இருக்க இம்மக்கள் தற்போது குடி நீர் பெறமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இத்தோட்டத்தில் சுத்தமான குடிநீரை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றபோதிலும் தோட்ட நிர்வாகம் இதில் அக்கறைகாட்டாமல் செயல்படுவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு குடிநீரை பெற்றுத்தருமாறு மலையக அரசியல் வாதிகளிடம் கோரிக்கைவிடுத்த போதிலும்  இதுவரை எந்த அரசியல்வாதிகளும் முன்வரவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என இத்தோட்டமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் 10 கிலோ தங்கத்துடன் கைது!

0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே பத்து கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நாமல் ராஜபக்ஷவின் செயலாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் கைவிடப்பட்டுள்ள காணிகள் மீள் கையளிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!

0

வன்னியில் கைவிடப்பட்ட காணிகளை மீள உரியவர்களுக்கு கையளிக்காமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

யுத்தம் நடைபெற்றபோது வன்னி மாவட்டத்தில் மக்கள் தங்களது காணிகளை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்ற போது அந்த பகுதிகளை வேற்றவர்கள் கைப்பற்றியிருந்தனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது சம்பந்தப் பட்ட காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு வாக்குறுதியொன்றை வழங்கினார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து.

எனினும் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணி ஆணையாளர் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று மனுதாரர்கள் நேற்றைய தினம் நிதிமன்றத்தில் மீண்டும் முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.

அதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் உட்பட மூவர் அடங்கிய நீதியரசர்களின் குழு, காணிகளை மனுதாரர்களுக்கு பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பாக எதிர் வரும் ஜுலை மாதம் 26 ம் திகதி விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹன்தான மலைப்பகுதியில் மண்சரிவு அபாயம்!

0

கண்டி – உடுவெல பாதையில் ஹன்தான – 4 ஆம் தூண் அருகில் உள்ள பிரதேசத்தில் உள்ள நிலத்தில் விரிசல் காணப்படுவதாக ஹன்தான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

15 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியில் காணப்படும் இந்த விரிசலில் மண்சரிவு அறிகுறிகள் காணப்படுவதாக அந்த அமைப்பின் செயலாளர் அமித் சேனாநாயக்க தெரிவத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைத்தடை!

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற், விமான மற்றும் இராணுவப் படைகளின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

திருகோணமலையில், சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது, கடற்படை அதிகாரியொருவரை திட்டியதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகின்றது.

சம்பூரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான அறிக்கை, கடற்படையினரால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற விரும்பும் நாதன் லியொன்!

0

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியொன் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் ஜூலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இத் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சிற்காக முரளிதரனிடம் பயிற்சிபெறவுள்ளதாக நாதன் லியொன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவுஸ்திரேலிய வலைத்தளம் ஒன்றுக்கு செய்தி வெளியிட்ட நாதன் லியொன், ‘ இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என முரளி தெரிவித்துள்ளார். அதனால் நான் முரளியிடம் பந்துவீச்சுப் பயிற்சிகளைப் பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எமக்கு அவரின் ஆலோசனைகளைப் பயிற்சிக்களத்தில் பெறமுடியும் என்றால் அது நன்றாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 28 வயதான நாதன் லியொன் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 32.87 என்ற பந்துவீச்சு சராசரியில் 195 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

200 விக்கட்டுகளைக் கைப்பற்றுவதற்கு இன்னும் 5 விக்கட்டுகள் தேவை என்ற நிலையில் இலங்கை தொடரில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றுவதன் மூலம் 200 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாவது அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது முக்கிய விடயமாகும்

நல்லாட்சி மீது சர்வதேசத்தின் அதிருப்தி அதிகரிக்கிறதா?

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

ஜனாதிபதியின் செயலகப் பிரதிநிதிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வலி வடக்கு பாதுகாப்பு வலயப் பகுதியையும்,அகதி முகாம்களையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த வருகையின் நோக்கமானது,தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விட நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பதும், அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதுமே,ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் விஜயத்திற்கான நோக்கங்கள் என அரசாங்கம் வெளி உலகுக்கு காட்ட முற்படுகின்றது.

இதற்குக் காரணம் தொடர்ந்தும் தமது காணிகளை விடுவித்து தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் வலியுறுத்தி வருவதை இலங்கை அரசாங்கம் செவிமடுத்து தமிழ் மக்களின் மீதான அக்கறையில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று நம்பிவிடக் கூடாது.

தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கை தொடர்பாக அமெரிக்கா தலைமையில் பரிந்துரைக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்போடு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரிப்பதற்கான பொறிமுறை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்கையும், கால தாமதத்தையும் கொண்டிருப்பது தொடர்பாக அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நா குழுவின் இரண்டு பிரதிநிதிகள் தமது ஆலோசனைககள்,கருத்துக்கள் உள்ளடங்கிய 46 பக்க அறிக்கையை இலங்கை அரசிடம் கைளித்துச் சென்றுள்ளனர். எதிர்வரும் 13ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையகத்தின் 32ஆவது அமர்வில் அந்த அறிக்கையை சம்ர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையிலே இலங்கை அரசு நிலங்களை விடுவிப்பது, மீள்குடியேற்றம் என்பவற்றை நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாக ஒரு செய்தியை சர்வதேச சமூகத்திற்கு அனுப்ப முயற்சிக்கின்றது. ஆனால் மனித உரிமை ஆணையகமும், சர்வதேச சமூகமும் இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதோ, இலங்கை அரசு ஏற்றுக் கொண்டபடியான பொதுநலவாய நாடுகளின் வழங்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளையே என்பதால் அது தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் தனது முன்னெடுப்புக்களைச் செய்யவேண்டும்.

அதைவிடுத்து காணிகளை பார்வையிடுவதும்,அகதி முகாம்களை பார்வையிடுவதும் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தாது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் தென் இலங்கை அரசுகள் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக நடந்து கொள்வதாலேயே ஆரம்பத்தில் இணங்கி வருகின்ற சர்வதேச சமூகம் பின்னர் இலங்கை அரசுகளைவிட்டு கடந்த காலத்தில் தூரமாகிப் போயிருக்கின்றது.

தற்போது நல்லாட்சி என்று கூறினாலும், தமிழ் மக்களுக்கு இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் மீதான கசப்பான அனுபவங்களில் ஒன்று, ஜனாதிபதியே நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினாலும், அல்லது அடையாளத்திற்கு ஒரு பகுதி நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைத்திருந்தாலும் படையினர் அந்த உத்தரவை மதித்து செயற்பட்டதில்லை. அதையிட்டு அரசாங்கம் வாய் திறப்பதே இல்லை. தமிழ் மக்களின் நிலங்களை மீளவும் ஒப்படைப்பது, கைதிகள் விடுதலை இவ்வாறான விடயங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் வேறாகவும், படையினர் வேறாகவுமே செயற்பட்டு வருகின்றனர் என்பதை ஏற்கெனவே நாம் கூறியிருக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மஹிந்த ராஜபக்ச என்ன உத்தரவை இடுகின்றாரோ அதை படையினர் நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் நல்லாட்சி படையினர் அரசுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை தற்போதைய அரசு இரண்டு தலைமைத்துவங்களைக் கொண்டிருப்பதால் படைகள் இருவரையும் கையாளும் தந்திரோபாயத்தைக் கொண்டு இயங்குகின்றார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் என்று வெளியில் கூறிக் கொண்டாலும்,பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டபடியேதான் அரசாங்கம் போய்க் கொண்டிருக்கின்றது. நிதி அமைச்சர் மாற்றம், புதிய அமைச்சர்கள் நியமனம் என்று சில பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் தீர்வுகாண முடியாமல் இருக்கின்றார்கள்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனா தனது உரையில் இன்னொரு முறை ஜனாதிபதியாக போட்டியிட மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது, அடுத்த தேர்தலிலும் மைத்திரிபால போட்டியிடுவார் என்று சுதந்திரக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் கூறிவருகின்றனர்.

அந்தக் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால நிராகரிக்கவும் இல்லை. ஆனால் தொடர்ந்தும் தற்போதுள்ள ஜனாதிபதி அதிகாரங்களை தன்வசமே வைத்திருப்பதற்கும், அடுத்த தடவையும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்குமான முன் தயாரிப்புக்கள் ஜனாதிபதி அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களிளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

இதற்கிடையே அடுத்ததாக தனித் தலைமையின் கீழ் ஆட்சியை அமைப்பதற்கான தேவையையும், அதற்கான திட்டங்களையும் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் திரை மறைவில் முன்னெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியானது, தனியாக ஆட்சியை அமைக்குமாக இருந்தால், அதைப் பாதுகாக்கும் பங்களிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது.
மறுபக்கத்தில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனியாக ஆட்சியமைக்க முற்படுமாக இருந்தால்,அதற்கு தற்போதைய பொது எதிரணியை இணைத்துக் கொண்டாலும், மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கின்றது.

இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்துகின்ற மற்றும் ஒருங்கிணைக்கின்ற பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரக் கூட்டமைப்பின் இந்த முயற்சிகளின் பரிணாம வளர்ச்சியானது,மஹிந்த ராஜபக்சவை பிரதமராக முன்னிறுத்தி ஆட்சியைக் கைகப்பற்றுவதாக இருப்பதை சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களே வெளிப்படையாக கூறுமளவுக்கு நிலைமை உள்ளது.
உள்ளக அரசியல் இழுபறிகள் திமிறிக் கொண்டு வெளிக்கிளம்புமாக இருந்தால், சர்வதேச சமூகத்தின் இலங்கை தொடர்பான திட்டங்களும் எதிர்பார்ப்புக்களும் சிதறிப்போய்விடும் என்பதால், அத்தகைய குழப்பங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் மீதான தமது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவே சர்வதேச சமூகமும் முற்படும்.

இந்த நிலைமையானது, குழப்பங்களைத் தீர்த்துக் கொண்டு ஏற்றுக் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்ற கேள்விக்கு வலிமை சேர்க்கும். தவிர்க்க முடியாமல் அதற்கும் சர்வதேசம் தலையாட்டும் என்று இலங்கை ஆட்சியாளர்கள் கணக்குப் பார்க்கவும் இடம் இருக்கின்றது.

டெஸ்ட் தொடரில் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரராக சமிந்த!

0

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிலிருந்து துஷ்மந்த சமீர பின்முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக தாயகம் திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக சமிந்த பண்டார இணைக்கப்பட்டுள்ளார்.

சூர்யாவின் ’24’ படம் 100 கோடி வசூலித்து சாதனை!

0

சூர்யாவின் நடிப்பில் வெளியான ’24’ திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ’24’. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியானது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை 70 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.

முதன் முறையாக 3 வேடங்களில் சூர்யா இப்படத்தில் நடித்திருந்தார். வேறு பெரிய படங்கள் இல்லாத நிலையில் வெளியான ’24’ முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 55 கோடிகளை வசூலித்தது.

இந்தியா தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு இன்னும் குறையவில்லை.

குறிப்பாக அமெரிக்காவில் 10 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

3 வாரங்கள் முடிவில் இப்படம் 100 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் வில்லன், தயாரிப்பாளர், நடிகன் என்று மூன்றிலுமே சூர்யா வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இதுதவிர ‘அஞ்சான்’, ‘மாசு’ போன்ற தோல்விகளிலிருந்தும் சூர்யா தற்போது மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.