Home Blog Page 3

35 கிலோ தங்கத்தை கடந்தி வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

0

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும், 13 கிலோ தங்க நகைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்​ை

தைலம், கற்பூரம் தேய்த்ததால் 8 மாத குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!

0

சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, சென்னையில் இடம்பெற்றுள்ளது.

தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என நினைத்து, அவ்விரண்டையும் சேர்த்துக் குழைத்து, குழந்தையின் மூக்கில் தேய்த்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம் சம்பவம் : சந்தேகநபரின் கோரிக்கை நிராகரிப்பு!

0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபர் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த,

“பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.

சந்தேகநபர் இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட்டு ஊடகங்கள் மூலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்தி பாதிக்கப்பட்ட வைத்தியரை அவமானப்படுத்த வேண்டுமென்றே முயற்சிப்பதாகவும் உப பொலிஸ் பரிசோதகர் சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, சந்தேக நபர் இதுபோன்ற தீங்கிழைக்கும் பொய்யான தகவல்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்றும் உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தை கோரினார்.

சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர்.

ஒன்றரை இலட்சத்துக்கு கிட்டிய தொகையினர் வௌிநாடு பயணம்!

0

2025 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான  6 மாதங்களில் 1,44,000 (1 இலட்சத்தி 44 ஆயிரம்) பேர் தொழிலுக்காக வெளிநாடு பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

88,684 ஆண்கள்  55,695 பெண்கள், ஆகக்கூடுதலான 38, 806 பேர் குவைத் நாட்டுக்கே சென்றுள்ளனர்.துபாய் நாட்டுக்கு 28,973 பேர், 21,958 பேர் கட்டார், சென்றுள்ளனர்

அதேவேளை ஜப்பான் 6073 பேர்,  தென்கொரியாவுக்கு 3134 பேர்,  கடந்த 6 மாத காலங்களில் இலங்கையர்  வெளிநாட்டுக்குச் சென்று 3.73 பில்லியன் டொலர்களை அந்நியச் செலாவணியை உழைத்து அனுப்பியுள்ளனர் இதன் படி 2025 ஆம் ஆண்டு இறுதியில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்ற வருவாயை இலங்கை பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்!

0

அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதிருந்தே தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம், கூட்டணி, வாக்குறுதி, திட்டங்கள் என மக்களை நோக்கி செல்கின்றன.

இந்தநிலையில், ஆளும் கட்சியான திமுக, மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் சரியாக மக்களிடம் சென்று சேரவும்.

மக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும். ஆட்சியும் அதன் செயல்பாடுகளும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என திமுக அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்ததோடு, ஆளுக்கொரு துறைகளையும் பிரித்துக் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பின்னணி

1966 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். கால்நடை மருத்துவத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டத்தை முடித்த ராதாகிருஷ்ணன், ஆட்சிப்பணி மீது இருந்த ஆர்வத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதி 1992ல் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர் தூத்துக்குடி துணை ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். நிதித்துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளில் பணியாற்றியவர், 2001 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

பென்சிசு கொலைக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்து மக்கள் நம்பிக்கையை பெற்றவரை, தஞ்சாவூர் ஆட்சியராக நியமித்தது தமிழக அரசு.

சுனாமி வந்த போது தனது ஒருங்கிணைப்பு பணிகளால் மக்களே கொண்டாடும் அளவுக்கு செயலாற்றினார் ராதாகிருஷ்ணன்.

நிவாரணம் சரியாக போய்ச் சேர அவர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றன. அப்போதுதான் சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுமியை தத்தெடுத்துக் கொண்டார் ராதாகிருஷ்ணன்.

இதன்பின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சி பொறுப்பில் இருந்தவர், 2012ல் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்த ராதாகிருஷ்ணன், ஒரே பொறுப்பில் அதிக ஆண்டுகள் வேலை பார்த்த செயலாளராக இருந்தார்.

இப்படி பல அனுபவங்களை கொண்டவரை சென்னையின் ஆணையராகவும், போக்குவரத்து துறை செயலாளராகவும், கொரோனா சமயத்தில் ஆலோசகராகவும் நியமித்து பயன்படுத்திக் கொண்டார் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் பின்னணி

வட மாநிலத்தவராக இருந்தாலும், தமிழில் சிறப்பாக பேசக்கூடியவர் தான் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ். 1968 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ககன்தீப் சிங் பேடி, மின்னணுவியல் துறையில் பட்டம் முடித்தார்.

பின்னர் கல்லூரி ஒன்றில் மூன்று ஆண்டுகள் விரிவுரையாளராக பணியாற்றியவர், ரயில்வே துறையில் சேர்ந்து பணியாற்றினார்.

1993 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். பயிற்சி காலத்தில் சிறந்த மாணவருக்கான விருதை வென்ற ககன்தீப் தமிழ்நாடு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சில மாவட்டங்களில் துணையாட்சியராக பணியாற்றியவருக்கு மதுரை மாநகராட்சி பணி தேடி வந்தது.

மதுரை ரிங்ரோடு பணிகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியவற்றை சிறப்பாக முடித்தவர் கன்னியாகுமரி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பிளாஸ்டிக்கிற்கு எதிராக அவர் மேற்கொண்ட விழிப்புணர்வு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மிகச் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான பல விஷயங்களை குறுகிய காலத்தில் செய்து முடித்தார்.

யுனிசெப் தூதுவராக இருந்த பில் கிளின்டனோடு ஒரு நாள் முழுக்க பயணம் மேற்கொண்டார் ககன்தீப். இவரின் நடவடிக்கைகளை கவனித்த கிளின்டன் அவரை மனமுவந்து பாராட்டினார்.

இதன்பிறகு தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி துறை, சென்னை மெட்ரோ குடிநீர், கால்நடை பராமரிப்பு துறை, வருவாய் துறை என பல பணிகளை மேற்கொண்டார்.

கொரோனா காலத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பேடி, சிறப்பான பணியாற்றி இறப்பு விகிதங்களை குறைக்க உதவினார்.

இப்படி பல துறைகளில் அனுபவம் கொண்ட ககன்தீப் சிங்கை அரசு செய்தி தொடர்பாளராக நியமித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அமுதா ஐஏஎஸ் பின்னணி

அமுதா ஐஏஎஸ் அதிகாரியை யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள். கலைஞர் இறந்த போது, முன்னாள் முதல்வர் என்ற முறையில் இறுதிச் சடங்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு பெண் அதிகாரியை நியமிக்கிறது.

லட்சக்கணக்கில் தொண்டர்கள், தொலைக்காட்சிகளில் லைவ் கவரேஜ், கண்ணீரோடு நிற்கும் குடும்பம், மறைமுகமாக ஒரு பிரஷர் என பல அழுத்தம் இருந்தாலும், அனைத்தையும் சரியாக திட்டமிட்டார்.

ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை ஒவ்வொருவரையும் சரியாக அழைத்து வந்து இறுதிச் சடங்கை செய்ய வைத்தார். கடைசியில் தானும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி குழியில் போட்டு மொத்த திமுகவையும் உணர்ச்சி வசப்பட வைத்தார். அந்த அதிகாரிதான் அமுதா ஐஏஎஸ்.

1970 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார் அமுதா. விடுதலை போராட்ட வீரர்களான தாத்தா பாட்டியின் வளர்ப்பில் தைரியமான பெண்ணாக வளர்ந்து வந்தார். வேளாண் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

ஐஏஎஸ் தேர்வில் வென்று 1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஈரோடு மாவட்ட துணையாட்சியராக பணியாற்றியபோது வனப்பகுதிக்குள் இருந்த மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்து கூறி, அவர்களை தவறான வழியில் செல்வதிலிருந்து மீட்டார்.

செங்கல்பட்டு துணையாட்சியராக இருந்தபோது அங்கு நடந்த மணல் கடத்தலை தனி ஆளாக சென்று எதிர்த்தார். இது முதல்வரின் கவனத்துக்கு உடனடியாக சென்றது. பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி ஆட்சியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

சுமார் 14 துறைகளில் பல ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும், சென்னை வெள்ளத்தின் போது அமுதா மேற்கொண்ட பணிகள் முக்கியமானவை.

குறிப்பாக வெள்ளத்துக்கு பின் நாட்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களின் லிஸ்டை எடுத்து எந்த பயமும் இன்றி அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கினார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேராக சென்று அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்தார்.

திடீரென மத்திய அரசுக்கு சென்று பிரதமர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அதோடு ஆட்சிப்பணி அதிகாரிகளின் பயிற்சி மையமான முசோரி லால்பகதூர் சாஸ்திரி மையத்தில் பொது நிர்வாக பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் தான் மீண்டும் திமுக ஆட்சி வந்தபோது மாநில பணிக்கு வந்து பணியாற்றி வருகிறார். இடையில் உள்துறை செயலாளராக கூட பணியாற்றினார். தற்போது இவரையும் அரசு செய்தி தொடர்பாளராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.

தீரஜ் குமார் ஐஏஎஸ் பின்னணி

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்து வளர்ந்த தீரஜ் குமார், பிடெக் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி. 1993 தமிழ்நாடு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான தீரஜ், தனது ஐஏஎஸ் பயிற்சியை ஐஎம்எம் பெங்களூருவில் முடித்தார்.

இதை அடுத்து 1994 முதல் 1996 வரை கோவை இணையாட்சியராக பதவி வகித்திருந்த தீரஜ், 1996 முதல் 1998 வரை நில வருவாய் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளையும் வகித்து வந்தார்.

பின்னர் துணையாட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார் தீரஜ் குமார். 2006ல் தொழில்துறை கூடுதல் செயலாளர், 2009ல் வணிகவரி மற்றும் தொழில்துறை ஆணையர் என பல பதவிகளை வகித்தார்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு பணிக்கு சென்றார் தீரஜ். 2017ல் மீண்டும் தமிழ்நாடு மாநில அரசு பணிக்கு திரும்பினார் தீரஜ்.

அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகள் மேம்பாடு, வறுமையை ஒழித்து வாழ்வியலை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், சிறு தொழில் தொடங்க நிதி உதவிகளை அணுகும் வாய்ப்பு என உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கொண்டுவரப்பட்டது.

வாழ்ந்து காட்டுவோம் என்ற அந்த திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் தீரஜ். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சர்ச்சை எழ, அமுதா ஐஏஎஸ்க்கு பதிலாக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் தீரஜ் குமார்.

தற்போது இவரும் அரசு செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இப்படி தங்களது அரசில் முக்கிய பதவிகளை வகித்த நான்கு மூத்த அதிகாரிகளை தற்போது அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்த நால்வரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் சென்று சேர, செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள். தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், திமுக அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நன்றி ஒருவன் செய்தி இ​ணையத்தளம்

இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தால் இலங்கைக்கு நெருக்கடி!

0

“பரஸ்பர வரி” முறையின் கீழ் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியை இலங்கை குறைக்கத் தவறினால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகளைக் கொண்ட பிற நாடுகளை நோக்கித் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 30 வீத வரி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வியட்நாமிற்கு தற்போது 20 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவிற்கு 20 வீதத்திற்கு குறைவான வரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை மீது விதிக்கப்பட்ட 30 வீத வரியைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று ஆடைத் துறை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரவிருக்கும் வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா மீது 20 வீதத்திற்கு குறைவான வரி விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தகைய சூழ்நிலையில், இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்தியாவிலிருந்து வரக்கூடும் என்று ஆடை தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு, இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, அதில் 40.04 வீதம் அல்லது 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஆடை ஏற்றுமதி வருவாய் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, அதில் 746.53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க சந்தைக்கான ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டது.

இலங்கையின் முக்கிய ஆடை ஏற்றுமதி சந்தை அமெரிக்கா என்பதுடன் இரண்டாவது பெரிய சந்தை இங்கிலாந்து ஆகும். கடந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதியில் அமெரிக்கா 40.04 வீத பங்கைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் இங்கிலாந்து 14.17 வீத பங்கைக் கொண்டிருந்தது.

ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கா நாட்டின் முக்கிய ஆடை சந்தை என்றும் அதை ஒரே இரவில் மாற்ற முடியாது என்றும் கூறினார்.

ஜனாதிபதி டிரம்ப் விதித்த 30 வீத வரி ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் குறைக்கப்படும் என்றும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால், ஆடைத் தொழில் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் ஆடை தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் சலாஹுதீன்!

0

அணித் தேர்வுகளில் பாரபட்சம் மற்றும் செல்வாக்கு செலுத்துவதாக தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட உதவி பயிற்றுவிப்பாளர் மொஹமட் சலாஹுதீன் நிராகரித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரைத் தீர்மானிக்கும் இன்றைய இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அணியின் சமீபத்திய மோசமான செயற்பாட்டுக்குப் பின்னர், அவரது எதிர்காலம் குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன.

இவ்வாறான பின்னணியில் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரை தெரிவுசெய்வது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாக தலைமைத் தேர்வாளர் காசி அஷ்ரப் ஹொசைன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து வெளியிடப்பட்ட சில நாட்களின் பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் அமினுல் இஸ்லாம், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மொஹமட் சலாஹுதீனை ஆதரித்து கருத்துகளை வெளியிட்டார்.

இந்தநிலையில், நேற்றைய ஊடக சந்திப்பில் இந்த விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மொஹமட் சலாஹுதீன், தேவைப்பட்டால் பதவி விலகுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.

சிறந்த ஒருவர் வந்தால், அது அணியின் நன்மைக்கானதாக இருக்கும் என தெரிவித்தார்.

27-28 ஆண்டுகளாகப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் தமக்கு போதிய தெளிவு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆளும் கட்சி உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

0

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான வழக்கறிஞர் தாரக நாணயக்காரவின் வீட்டில் இன்று (16) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், வழக்கறிஞர் உதய குமார வுட்லர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 4.39 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஏழு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், டி-56 துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது

பொம்மை ஆசையில் இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்!

0

பொம்மைகள் நிரப்பப்பட்ட இயந்திரத்துக்குள் சிறுவன் ஒருவன் நுழைந்து அதற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தின் மேசன் நகரத்தில் நடந்துள்ளது.

இந்த இயந்திரத்துக்குள் இருக்கும் பொம்மைகளை Joystick மூலம் எடுப்பதுதான் இந்த விளையாட்டு.

ஆனால் குறித்த சிறுவன், இயந்திரத்தில் இருந்து பொம்மை வெளியே வரும் துளை வழியாக இயந்திரத்துக்குள் நுழைந்து சிக்கிக்கொண்டார்.

பின்னர் தீயணைப்பு துறையினர், இயந்திரத்தின் பின் பக்கத்தை திறந்து சிறுவனை மீட்டனர்.

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6 கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி!

0

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நடை​பெற உள்​ளது. இந்த ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 128 வருடங்​களுக்​குப் பிறகு கிரிக்​கெட் விளை​யாட்டு ஒலிம்​பிக்குக்கு திரும்பி உள்​ளது. இந்​நிலையில், போட்டி அமைப்​பாளர்​கள் லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் கிரிக்​கெட்​டில் 6 அணி​கள் மட்​டுமே கலந்து கொள்ளும் என உறுதி செய்​துள்​ளனர்.

ஆடவர் பிரி​வில் 6 அணி​களும், மகளிர் பிரி​வில் 6 அணி​களும் கிரிக்​கெட் விளை​யாட்​டில் கலந்து கொள்​ளும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடைசி​யாக 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் இடம் பெற்​றிருந்​தது. இதில் கிரேட் பிரிட்​டன், பிரான்ஸ் அணி​கள் விளை​யாடி இருந்​தன. இந்த இரு அணி​கள் இரு நாட்​கள் கொண்ட ஆட்​டத்​தில் மோதி​யிருந்​தன.

இம்​முறை லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் கிரிக்​கெட் டி20 வடி​வில் இடம் பெறுகிறது. ஒவ்​வொரு அணி​யிலும் தலா 15 வீரர்​கள் இடம் பெறு​வார்​கள். இந்த வகை​யில் ஆடவர் பிரி​வில் மொத்​தம் 90 வீரர்​களும், மகளிர் பிரி​வில் மொத்​தம் 90 வீராங்​க​னை​களும் இடம் பெற வேண்​டும். சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சிலில் ஆப்​கானிஸ்​தான், ஆஸ்​திரேலி​யா, வங்​கதேசம், இங்​கிலாந்​து, இந்​தி​யா, அயர்​லாந்​து, நியூஸிலாந்​து, பாகிஸ்​தான், தென் ஆப்​பிரிக்​கா, இலங்கை, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், ஜிம்​பாப்வே ஆகிய 12 நாடு​கள் முழு நேர உறுப்​பினர்​களாக உள்​ளன. இத்​துடன் 94 நாடு​கள் இணை உறுப்​பினர்​களாக உள்​ளது.

2028 ஒலிம்​பிக் கிரிக்​கெட் போட்​டிக்​கான தகுதி அளவு​கோல்​கள் இன்​னும் உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை. ஆனால் விளை​யாட்டை நடத்​தும் உரிமையை பெற்​றுள்​ளதன் அடிப்​படை​யில் அமெரிக்க அணி நேரடி​யாக தகுதி பெறக்​கூடும். இதனால் 5 அணி​கள் மட்​டுமே தகுதி பெற முடி​யும் என கருதப்​படு​கிறது. இந்த 5 அணி​களும் ஒரு குறிப்​பிட்ட கட்​-ஆஃப் தேதிக்​குள் ஐசிசி தரவரிசை​யின் அடிப்​படை​யில் தேர்​வாகக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் கிரிக்​கெட், பேஸ்​பால் உள்​ளிட்ட 5 விளை​யாட்​டு​கள் புதி​தாக சேர்க்​கப்​பட்​டுள்​ளன. இதற்கு சர்​வ​தேச ஒலிம்​பிக் கமிட்​டி​யின் செயற்​குழு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. இதனால் 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டியை​விட 22 பதக்க போட்​டிகள் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 351 பதக்க போட்​டிகள் நடை​பெறும். புதி​தாக 5 விளை​யாட்​டு​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தால் 698 வீரர், வீராங்​க​னை​கள் கூடு​தலாக பங்​கேற்​பார்​கள். வரலாற்​றில் முதன்​முறை​யாக, அனைத்து குழு விளை​யாட்​டு​களி​லும் ஆண்​களுக்கு சமமான எண்​ணிக்​கையி​லான பெண்​கள்​ அணி​கள்​ இருக்​கும்​.