Home Blog Page 1173

மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு .

0

இ.தொ.கா இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 25 திறமைவாய்ந்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூபா 12,000/- பெறுமதியான கல்வி புலமை பரிசில்கள் மற்றும் புத்தகப்பைகள் , பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் , இ தொ கா இளைஞர் அணி தலைவர் ராஜமணி பிரசாந்த் ,இ தொ கா இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் , இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் இ தொ கா முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர்.

க.கிஷாந்தன்

கடுகண்ணாவ நுழைவாயில் தொடர்ந்து மூடப்படும்

0

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் மாவனெல்ல மற்றும் கடுகண்ணாவ வுக்கு இடையிலான பகுதி மேலும் மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா 3ஆவது இடம்

0

உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மதுபான விலைகளில் மாற்றம்.

0

நேற்றைய வரவு செலவுத் திட்ட முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 2) 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

750 மில்லிலீற்றர் கொண்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை 126 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய மதுபானங்களான 750 மில்லிலீற்றர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும், பியர் (330மி.லீ – 5%க்கும் குறைந்த) விலை 3 ரூபாவினாலும், பியர் (330மி.லீ- 5 %க்கும் அதிகமான) விலை 14.96 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முறையான திட்டமிடல் இல்லாத JDB நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் .

0

தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல், நிதி பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JDB நிறுவனம் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் செய்த வேலைக்கான சம்பளம், இந்த மாதம் 10ம் திகதிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அதை விடுத்து JDB நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிதி பற்றாக்குறை என கூறி சம்பளத்தை JDB நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டதக்கது.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு பொறுப்பு கூற வேண்டிய முக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தாது அலட்சிய போக்கில் உள்ளனர்.

அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது.

நாட்டில் அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் குறிப்பிட்ட திகதியில் சரியான முறையில் வழங்கப்படுகிறது. ஆனால் அரசின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் சம்பளம் குறிப்பிட்ட திகதியில் வழங்கப்படாமை என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில்,தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்தே வாழ்க்கை செலவை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் JDB யின் இந்த செயற்பாடு முற்றிலும் கண்டிக்கதக்கது.

தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகின்றனர். அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான திகதியில் ஊதியம் வழங்காது, சம்பளத்தை தாமதிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது

தோட்ட தொழிலாளர்கள் அவர்கள் கடந்த மாதத்தில் செய்த வேலைக்கான சம்பளத்தை தான் குறிப்பிட்ட திகதியில் கேட்கிறார்களே தவிர, அவர்கள் வேலை செய்ய போகும் மாதத்திற்கான சம்பளத்தை அல்ல.

தோட்ட காணிகளை தனியாருக்கு விற்பனை செயவதில் அக்கறை காட்டும் JDB ,தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்துவதில் அசமந்த போக்கில் உள்ளது.

எனவே தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தாமதமின்றி குறிப்பிட்ட திகதியில் JDB நிறுவனம் கண்டிப்பாக வழங்க வேண்டும். வழங்க தவறும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் தலைவர்,இயக்குனர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இது தொடர்பாக தொழில் அமைச்சின் கவனத்திற்கு செந்தில் தொண்டமான் அவர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது..
Attachments area

ஒருவருடமாக மூடப்பட்டிருந்த கிறிஸ்லஸ்பார்ம் தோட்ட தொழிற்சாலைக்கு 25 நாட்களில் தீர்வு. உறுதியளித்தது தோட்ட நிர்வாகம்

0

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிறிஸ்லஸ்பார்ம் தோட்டத்தின் தொழிற்சாலை மூடப்பட்டமைக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்தொழிலாளர்கள் பணிபகீஸ்கரிப்பில் ஈடுட்டுள்ளனர்.

கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! முடக்கப்படுமா நாடு?

0

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 723 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான விலைகளும் அதிகரிப்பு

0

நேற்றைய பாதீட்டு முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

0

அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு கூடவுள்ளது.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 தினங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

அதேநேரம் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், அதன் மீதான விவாதம் 16 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு 3 ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.