அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் இன்றைய தினமும் (14.11.2021) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பசறையில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
பசறை மடுல்சீமை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 75 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட நால்வரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவை என மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவை என நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டு தொடர்பான ஆணைக்குழுவிடம் மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவையென மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவிடமே இம்மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவின் ஆணையாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம்பெற்று வரும் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மற்றும் அக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மலையக மக்களின் தனித்துவமான அடிப்படை பிரச்சினைகள் என்ற ரீதியிலும் தீர்வுகளை வலியுறுத்தி ஆணைக்குழுவிடம் பூர்வாங்க அறிக்கையினையும் கையளிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது முன்வைக்கபட்ட சாட்சியங்கள் மற்றும் பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு:
● இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இனியும் காலம் தாழ்த்தாமல் நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்படல் வேண்டும்.
● உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வரும்போது இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளும் சமூக அந்தஸ்தும் யாப்பு ரீதியாக உறுதிப் படுத்தப்படல் வேண்டும். அதில் மலையக மக்களுக்கு தனியான தேசிய இனம் என்ற அடையாளத்துடன் அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும்.
● மனித உரிமைகள் சார்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இனம், தேசியம், மதம், மொழி, நிறம், கலாச்சாரம், பிரதேசம், பால், வயது, உடல் உள வலு ரீதியான பாகுபாடுகளற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும். சகலருக்கும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் சட்டத்தின் முன் சமநிலை, கருத்து சுதந்திரம், கல்வி பண்பாடு, விரும்பும் தொழிலை செய்யவும், விரும்பும் இடத்தில் வசிக்கும் உரிமைகள் போன்ற அனைத்தும் அரசியல்யலைமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
● உத்தேச தேர்தல் முறைமைகள் தொடர்பான யோசனைகளில் சிறுபான்மை சமூகங்களின் விகிதாச்சார, கலப்பு பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி நிர்ணயத்தில் ஜனநாயக ரீதியான அங்கத்துவம் என்பன பாரபட்சமின்றி உறுதி செய்யப்படல் அவசியம்.
● அதிகார பரவலாக்கம் என்ற விடயத்தில் மாகாணம், மாவட்டம் மற்றும் உள்ளூராட்சி தொகுதிகளில் காணப்படும் சமத்துவமின்மை நீக்கப்படுவதோடு நிர்வாகம், அபிவிருத்தி என்பனவற்றில் சகலருக்கும் ஏற்ற வகையில் நிலையான கொள்கைகள் அவசியம்.
● இந்திய இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் குறைந்த பட்ச தீர்வாக 13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடன் துரிதமாக தேர்தல்களை நடாத்த வேண்டும்.
● மலையக மக்களின் குடியிருப்பு, புதிய கிராமங்கள் அடிப்படையிலான வீடமைப்பு,குடிநீர் வசதி, சுகாதாரம் , போக்குவரத்து, காணி, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, (தனியான பல்கலைக்கழகம்) வர்த்தகம், கைத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் சமூக நலன்கள் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவான நிரந்தர தீர்வுகள் வேண்டும்.
● தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள், தொழில் சம்பந்தமான ஏனைய உரிமைகள், மாற்றுப் பயிர் செய்கை, மலையக மக்கள் கட்டம் கட்டமாக சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றம் காண்பது, சிறு குறு கைத்தொழில் முயற்சிகள்கள், கால்நடை வளர்ப்பு, மற்றும் ஏனைய கைத்தொழில் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
● மலையக இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்புடன் சமூக பொருளாதார நிலைகளில் தேசிய மட்டத்தில் ஏனைய சமூகங்களுடன் சமமான செயற்பாடுகள் மூலமாக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்.
● தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்ட வீடமைப்பு அமைச்சுக்கு மீண்டும் கெபினெட் அந்தஸ்து மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சினை மீண்டும் உருவாக்க வேண்டும்.
● தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விரைவான தீர்வு மற்றும் காரணமின்றி மலையக இளைஞர்கள் நகர்ப்புறங்களில் கைதாவதை தடுத்து நிறுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மலையக இளைஞர்களுக்கும் சம வாய்ப்புகள் உருவாக்கப்படல் அவசியம்.
● சிறுவர் துஷ்பிரயோகம், வயது குறைந்தோர் வீடுகளில் வர்த்தக நிலையங்களில் வேலைக்கர்த்தலை தடுத்தல் மற்றும் முதியவர்கள் தொடர்பான சமூக நலன்கள் குறித்து விஷேட கவனம்செலுத்த வேண்டும்.
● இனக் கலவரம் மற்றும் யுத்த பாதிப்புகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான தெளிவான கொள்கையும், இந்தியா அகதிகள் முகாம்களிலும் வெளியிலும் வாழும் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களின் விருப்பங்களை அறிந்து ராஜதந்திர தூதரக மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.
● மலைநாட்டுக்கு வெளியே வட மாகாணத்தின் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் நிர்வாகம், அபிவிருத்தி சார்ந்த உரிமைகள் தொடர்பாக ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
● நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளியினர் சார்பாக ஒரு நிர்வாக அலகு ஏற்படுத்தல் அவசியம். இந்தியாவில் ‘பாண்டிச்சேரி’ போன்ற பிரதேச எல்லைகளைக் கொண்டிராத மாநில நிர்வாக அதிகாரம் கொண்ட முதலமைச்சர், அமைச்சரவை முறைமையிலான சுயாட்சி நிர்வாகம் பற்றிய ஒரு பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளையில் ஏனைய சமூகங்களும் அமைச்சரவையில் இடம்பெறலாம்.
● வடகிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் பூர்வீக மக்களுக்கு மீளக்கையளிக்க வேண்டும். போரில் உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்த உரிமைகள் வழங்க வேண்டும். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.
● மலையக மக்களின் பல்வேறு அபிவிருத்திகள் சார்ந்த அதிகார சபை மற்றும் பொது நிதியம் ஊடாக சேவைகளை ஆற்றிட அரசியல் பாகுபாடுகள் இல்லாத பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.
பூர்வாங்க அறிக்கைக்கு மேலதிமாக சாட்சியங்களின் போது மேலோட்டமாக ஆராயப்பட வேண்டும். ஏனைய விடயங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையினை சமர்பிப்பதற்கும் ஆணைக்குழுவில் இணக்கம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது விளையாட்டு விழா.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது விளையாட்டு விழாவின் நுவரெலியா பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் (13/11/2022) நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.நுவரெலியா பிரதேச மட்டத்திலான பல விளையாட்டு கழகங்கள் உள்வாங்கப்பட்டு பல போட்டிகளில் பங்கேற்றியது.
இவ்விழாவில் வெற்றியீட்டிய கழகங்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு வெற்றி சான்றிதழ்களும் கேடையங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச காரியாலயங்களில் பணியாற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் செயலாளர் உட்பட சம்மேளனத்தின் செயலாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்
மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு .
இ.தொ.கா இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 25 திறமைவாய்ந்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூபா 12,000/- பெறுமதியான கல்வி புலமை பரிசில்கள் மற்றும் புத்தகப்பைகள் , பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் , இ தொ கா இளைஞர் அணி தலைவர் ராஜமணி பிரசாந்த் ,இ தொ கா இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் , இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் இ தொ கா முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர்.
க.கிஷாந்தன்
கடுகண்ணாவ நுழைவாயில் தொடர்ந்து மூடப்படும்
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் மாவனெல்ல மற்றும் கடுகண்ணாவ வுக்கு இடையிலான பகுதி மேலும் மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா 3ஆவது இடம்
உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
மதுபான விலைகளில் மாற்றம்.
நேற்றைய வரவு செலவுத் திட்ட முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 2) 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
750 மில்லிலீற்றர் கொண்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை 126 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய மதுபானங்களான 750 மில்லிலீற்றர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும், பியர் (330மி.லீ – 5%க்கும் குறைந்த) விலை 3 ரூபாவினாலும், பியர் (330மி.லீ- 5 %க்கும் அதிகமான) விலை 14.96 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முறையான திட்டமிடல் இல்லாத JDB நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் .
தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல், நிதி பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JDB நிறுவனம் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் செய்த வேலைக்கான சம்பளம், இந்த மாதம் 10ம் திகதிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அதை விடுத்து JDB நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிதி பற்றாக்குறை என கூறி சம்பளத்தை JDB நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டதக்கது.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு பொறுப்பு கூற வேண்டிய முக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தாது அலட்சிய போக்கில் உள்ளனர்.
அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது.
நாட்டில் அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் குறிப்பிட்ட திகதியில் சரியான முறையில் வழங்கப்படுகிறது. ஆனால் அரசின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் சம்பளம் குறிப்பிட்ட திகதியில் வழங்கப்படாமை என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில்,தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்தே வாழ்க்கை செலவை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் JDB யின் இந்த செயற்பாடு முற்றிலும் கண்டிக்கதக்கது.
தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகின்றனர். அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான திகதியில் ஊதியம் வழங்காது, சம்பளத்தை தாமதிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது
தோட்ட தொழிலாளர்கள் அவர்கள் கடந்த மாதத்தில் செய்த வேலைக்கான சம்பளத்தை தான் குறிப்பிட்ட திகதியில் கேட்கிறார்களே தவிர, அவர்கள் வேலை செய்ய போகும் மாதத்திற்கான சம்பளத்தை அல்ல.
தோட்ட காணிகளை தனியாருக்கு விற்பனை செயவதில் அக்கறை காட்டும் JDB ,தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்துவதில் அசமந்த போக்கில் உள்ளது.
எனவே தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தாமதமின்றி குறிப்பிட்ட திகதியில் JDB நிறுவனம் கண்டிப்பாக வழங்க வேண்டும். வழங்க தவறும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் தலைவர்,இயக்குனர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இது தொடர்பாக தொழில் அமைச்சின் கவனத்திற்கு செந்தில் தொண்டமான் அவர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது..
Attachments area
ஒருவருடமாக மூடப்பட்டிருந்த கிறிஸ்லஸ்பார்ம் தோட்ட தொழிற்சாலைக்கு 25 நாட்களில் தீர்வு. உறுதியளித்தது தோட்ட நிர்வாகம்
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிறிஸ்லஸ்பார்ம் தோட்டத்தின் தொழிற்சாலை மூடப்பட்டமைக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்தொழிலாளர்கள் பணிபகீஸ்கரிப்பில் ஈடுட்டுள்ளனர்.