Home Blog Page 1602

ஜெயலலிதா வழக்கு: வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல – உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!

0

கர்நாடக – ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இறுதி வாதம் தொடங்கியது.

முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்து ஆச்சார்யா வாதிட்டார்.

அவரது வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம்.

மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கேட்டனர். இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர்.

குறிப்பாக, “ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள்.

ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டு விட்டதாகவும் வாதிட்டீர்கள்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? ” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நிறுவனங்களின் வழக்கு விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

அன்றைய தினம் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைக்க உள்ளது.

சட்டவிரோதமாக வென்ஜர் தோட்டப்பகுதியில் மாணிக்கல் அகழ்வு இருவர் கைது!

0

 

சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டப்பகுதியில் 01.06.3016 புதன்கிழமை இரவு சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டனர்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் 02.06.3016 வியாழக்கிழமை அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம்அமைச்சர் திகாம்பரம்

0

 

அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் இயங்கி வந்த பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த 24 வருடங்களில் முதன் முறையாக அரசாங்கத்தைத் தலையிடச் செய்து வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணப்படி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தமே காரணமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு மேலாகவும் புதுப்பிக்கப்படாத நிலையில் அரசாங்கம் தனியார் துறைக்கு அறிவித்த வரவு செலவு திட்ட நிவாரணப்படியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தலையிட்டு சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விளக்கம் அளிக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்ற முறைமையை நாம் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம். ஒப்பந்தம் செய்யும் தரப்பினர் அமைச்சுப்பதவி அதிகாரங்களை வைத்துக்கொண்டு திரைக்கு முன் பேச்சுவார்த்தை என்றும் திரைக்குப் பின் கொடுக்கல் வாங்கல்கள் மூலமும் நாட் சம்பளத்தொகையை தீர்மானித்து வந்தமையை நாம் பலமுறை அம்பலப்படுத்தி வந்துள்ளோம். இம்முறை அமைச்சுப்பதவியை இழந்தவர்கள் வழமையான சித்து விளையாட்டுகளின் ஊடாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியாத நிலையில் ‘காலம் கனியும்’ வரை காத்திருப்பதாக தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை பணயமாக வைத்து அமைச்சுப்பதவிகளைப் பெற அடித்தளம் போடும் காய்களை நகர்த்த நினைக்கின்றார்கள்.

இத்தகைய கபட நாடகங்களை அம்பலப்படுத்தும் முகமாகவே மக்கள் இம்முறை மக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்கள் எங்களுக்கு வழங்கிய அதிகாரங்களைக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம். கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் குறைந்த பட்ச வேதனச் சட்டத்திற்கோ, வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி கொடுப்பனவுகளுக்கோ உரித்துடையவர்கள் அல்ல எனும் சட்ட ஏற்பாடுகள் உள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பாக முடிவுற்ற கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்த சட்ட சரத்துகள் ஏற்புடையதாகாது என பாராளுமன்றில் விவாதித்து அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம். அரசாங்கம் இந்த தர்க்கத்தை ஏற்று நிவாரணப்படியான மாதாந்தம் 2500ஃ- ஐ வழங்குமாறு அறிவுறுத்தியது போதும் கம்பனிகள் அதனை வழங்க மறுத்த நிலையிலேயே நாம் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். அதேபோன்று இப்போது தனியார் கம்பனி பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடாத்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரை இடைக்கால நிவாரணப்படியாக நாட்சம்பளத்தில் 100ஃ- ஐ அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனை நாங்கள் அரசாங்கத்தில் இருந்தவாறே பேச்சுவார்த்தைகள் மூலமும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மூலமும் சாதித்துள்ளோம். எங்களை அமைச்சுப்பதவிகளைத் துறந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் தலையிடக் கோருபவர்கள் அவர்களுக்கு தேவையானவர்களை அமைச்சுப்பதவியில் அமரச் செய்வதற்கான கைக்கூலிகள் என்பது எமக்கு தெளிவாகத் தெரியும். எமது மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள ஆணை என்ன என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளோம். மக்கள் ஆணையின் பேரில் எந்த முடிவையும் எடுக்க நாம் பின்னிற்கப் போவதில்லை.

எந்தக் கைக்கூலிகளினதும் கட்டளைகளுக்கும் அடிபணியப்போவதில்லை. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சட்டம் பேசும் சட்டத்தரணிகள் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வோம் என்ற வாய்ப்பேச்சு வீர்ர்கள் என்பதை நாமறிவோம். மீரியபெத்த மக்கள் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தாக்கல் செய்வோம் என வாய்ச்சவடால் விட்டவர்கள் தங்களது சட்டத்தை வைத்து இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. நிவாரணப்படி வழங்க முடியாது என சட்ட வியாக்கியாணம் பேசுவோர் முதலில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு தொடருவோம் என ஒவ் வொரு கூட்டு ஒப்பந்த தவணையின்போதும் விடும் அறிக்கைகளை புரட்டிப்பார்த்தால் அவர்களது சட்ட ஞானமும் கெட்ட ஞானமும் நன்றாக விளங்கும். 7 பேரைச் சேர்த்து சங்கம் பதிவு செய்துகொள்ளும் சட்டம் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மக்களிடத்தில் சென்று செயற்பட இவர்கள் வக்கில்லாதவர்கள் என வரலாறு வெளிப்படுத்தியிருக்கிறது.
ஐந்து வருடத்தில் ஐந்து கட்சிதாவிய சட்டத்தரணிகள் நிலையும் இதுதான். இப்போது அரசு தலையிட்டு நிவாரணப்படியைப் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கண்ட சட்டக்குறைபாடுகளுக்கு அர்த்தம் தேடிக் கொண்டு அடுத்து இரண்டு வருடம் கழித்து ‘வழக்கு போடுவோம்’ என வாய்ச்சவடால் விடுவார்கள். நாம் கனடாவிலும், ஐரோப்பாவிலும் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு பேஸ்புக் கில் மலையக மக்களுக்காக கண்ணீர் விடவில்லை. நாளாந்தம் களத்தில் நிற்கிறோம். மக்கள் ஆணை எங்களுக்கு இருக்கிறது. அந்த மக்கள் தீர்ப்பின்படி செயற்படுவோம். தொழிலாளர் துரோகிகளை ஓரம் கட்டும் வரை எமது பணிகள் பல்வேறு வடிவங்களில் தொடரும். நாம் என்றும் மக்களுடன் செயற்படுகின்றோம். அவர்களது ஆணைப்படியே செயற்படுகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் கைப்பற்றப்பட்ட கையடக்க அழைப்பேசிகளை அழித்துவிட உத்தரவு!

0

இலங்கை சிறைகளில் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை அழித்து விடுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் அருணி ஹெட்டிகல, இன்று பிறப்பித்துள்ளார்.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் இதர சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட 39 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 243 சிம் அட்டைகள் உள்ளடங்களாக அனைத்தையும் அழித்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து புலிக் கோயிலில் 40 புலிக் குட்டிகளின் உடல்கள் மீட்பு!

0

பாங்காக் – தாய்லாந்தில் உள்ள புலிக் கோயிலில் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அக்கோயிலில் இருந்த சமயற்கட்டில் இருந்த உறைவிப்பானில் ( freezer) இருந்து இந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய வனவிலங்கு பூங்கா துறையின் துணை இயக்குநர் அடிசோர்ன் நுச்டாம்ரோங் தெரிவித்துள்ளார்.

காஞ்சனாபூரி என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புத்த ஆலயம், சுற்றுலாப் பயணிகள் பலர் வரும் இடமாகும். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வளர்க்கப்பட்டு வரும் புலிகளோடு புகைப்படம் எடுப்பது வாடிக்கை.

இந்நிலையில், அக்கோயிலில் புலிகள் கடத்தப்படுவதாகவும், வதைக்கப்படுவதாகவும் அனைத்துலக அளவில் எழுந்த புகார்களை அடுத்து, கடந்த திங்கட்கிழமை அங்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 52 புலிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

என்றாலும், இன்னும் 85 புலிகள் அங்கிருப்பதாகக் கூறப்படுகின்றது.

சீன பாரம்பரிய மருத்துவத்திதில் புலியின் உடல் பாகங்கள் மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், புலிகள் கடத்தப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை!

0

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றை ஏற்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார்.

புதிய பணிப்பாளர் சபைக்கு பொலிஸ் ஊடகப் பிரிவில் பேச்சாளர்களாக பணியாற்றிய பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன, ருவான் குணசேகர ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகைமையற்றவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகிக்கின்றனர்! : அநுர

0

கல்வியில் தகைமையில்லாதவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகித்து வருவதாகவும், இது கல்வித் துறையிலும் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக கல்வித் துறையில் காணப்படும் தகைமை மட்டங்களை மீறி சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பல முறை பரீட்சைக்கு தோற்றி சாதாரண சித்தியை கூட பெற்றுகொள்ள முடியாத பலர் இன்று கல்வித் துறையில் நிறைவேற்று அதிகாரங்கள் உடைய அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

மேலும் ஊழல் குற்றசாட்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆறு பேர் இன்று பிரதமரின் அலுவலகங்களில் அரச அதிகாரிகளாக முக்கிய பதவிகளில் செயற்பட்டு வருவதாக அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, அரசியல் வெற்றி மற்றும் கட்சி ஆதரவு என்பவற்றினை எதிர்பார்த்து ஊழல் தொடர்பான விசாரணைகள் திசைத் திருப்பப் படுவதாகவும் மேலும் சில விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் ஜனாதிபதி அனுமதி மற்றும் தீர்மானங்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளவை ஜனாதிபதி காரியாலயத்திலே முடிவுகளற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊழலுக்கு எதிரான விசாரணைகள் என்ற பேரில் அழகான நாடகம் இப்போது அரங்கேறுவதாகவும், மஹிந்த காலத்தில் காணப்பட்ட முறையற்ற விதத்திலான ஆட்சியையே நல்லாட்சியும் மிக வேகமாக கொண்டு செல்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தெல்பத்தை தோட்டத்தில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!

0

பதுளை தெல்பத்த தோட்டத்தில் 16 வயது நிரம்பிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை தெல்பத்த தோட்டத்தை சேர்ந்த ராஜபூபதி சோனியா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சடலமாக மீட்கபடுவதற்கு முதல் நாள் (31 இரவு) இரவு தனது சகோதரருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என தெரிய வருகிறது.

இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைமகள் இந்து கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறைமதியுகராஜா பிரதம செயலாளர் சந்திப்பு!

0

 

மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் நிலவி வரும் ஆசிரிய பற்றாக்குறை சம்பந்தமாக இன்று மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா ஊடாக, மத்திய மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரட்ண அவர்களை பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஆர். சதீஸ்குமார் பாத்தஹேவாஹெட்ட பிரதேசசபை முன்னாள் பிரதித் தலைவர் ஆர். சண்முகராஜ் மற்றும் பழைய மாணவர் சங்க பொருளாளர் ந.ஜெகதீஸ் மற்றும் பாடாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் சந்திப்பொன்றை மேற் கொண்டனர்.

 

நீண்டகாலமாக இந்த குறைபாடு நிலவி வருவது தொடர்பாக சுட்டிக் காட்டப்பட்டது.

இதன் போது இப்பிரச்சினைக்கான தீர்வை மிக விரைவில் பெற்றுத் தருவதாக பிரதம செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்.

கருடன் புதிய வடிவம் எடுப்பதால் செய்திகள் தாமதமாகலாம் வாசகர்களே!

0

 

 

கருடன் இணையத்தளம் புதிய வடிவம் நோக்கி பயணிப்பதால் செய்திகள் தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் வாசகர்களே!

விரைவில் வழமைக்கு திரும்புவோம் அதுவரை செய்திகளின் தாமதத்துக்கு வருந்துகிறோம்.