Home Blog Page 1171

இன்றைய நாளுக்கான பாராளுமன்ற அமர்வு

0

பாராளுமன்ற அமர்வு இன்று (15) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் 09.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் 5.00 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

சூடு பிடிக்கும் பிக் பாஸ் 5 எலிமினேட் ஆகி இலங்கை தமிழர்.

0

பிக் பாஸ் 5ல் இருந்து இந்த வாரம் மதுமிதா எலிமினேட் ஆகி இருக்கிறார். வீட்டில் மற்ற போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்ட ராஜூ முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

படிப்பு முக்கியமில்லை மானமும், உசுரும் முக்கியம்
எதிர்பார்த்தது போலவே மதுமிதா இன்று பிக் பாஸ் 5ல் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் ஒரு விருது விழா நடத்தப்பட்டது. அதில் ராஜூவுக்கு முதலில் Best entertainer என பட்டம்கொடுத்தனர் . அதன் பிறகு அவரை அசிங்கப்படுத்தும் வகையில் தான் சில விருதுகள் வழங்கப்பட்டது.

புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி, mixture சாப்பிடுகிறார் என பல மோசமான விருதுகளை ராஜுவுக்கு கொடுத்தனர். அதன் பின் அவர் ஓப்பனாக பேசுவதில்லை என சொல்லி தலையில் தண்ணீர் ஊற்றி தண்டனையும் கொடுத்தார்கள்.

ஆனால் வெளியில் ரசிகர்கள் நினைப்பது வேறு என சொல்லி கமல் முதல் ஆளாக அவரை காப்பாற்றி இருகிறார். அது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய நோஸ்கட் ஆக இருந்திருக்கும்.

ஜெர்மனியில் இருந்து வந்து பிக் பாஸில் கலந்துகொண்டிருக்கும் மதுமிதா தான் இன்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு மொழி பிரச்சனை அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. நான் பேச நினைப்பதை சரியாக பேசி புரியவைக்கமுடியவில்லை என சொல்லி நேற்று மதுமிதா நிரூப்பிடம் கண்ணீர் விட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தான் அவர் இன்று எலிமினேட் ஆகி இருக்கிறார்.

டி20 சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது ஆஸ்திரேலியா.

0

2021-ம் ஆண்டு ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா முதல்முறையாக வென்றது.

வார்னர், மிட்ஷெல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து, 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

50 பந்துகளில் 77 ரன்கள்(4சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்ஷெல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருதும், டேவிட் வார்னருக்கு(53, 38 பந்துகள் 3சிக்ஸர், 4பவுண்டரி) தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

டேவிட் வார்னருக்கு பேட்டிங் வரவில்லை, ஃபார்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஐபிஎல் தொடரில் அணியிலிருந்துநீக்கி அமரவைத்தது. ஏறக்குறைய அணியிலிருந்து நீக்கி, பெஞ்சில் அமரவைத்தது. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்ம் எப்போதும் குறையவில்லை,அது சறுக்கல் மட்டும்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

120 பந்துகளில் 172 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இமாலய இலக்கு என்பதை உணர்ந்துதான் டேவிட் வார்னர் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த அதை மார்ஷ் பயன்படுத்திக்கொண்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.

அதிலும் மார்ஷின் நேற்றைய பேட்டிங் என்பது, தில்லுக்கு துட்டு என்ற ரீதியில்தான் இருந்தது.நியூஸிலாந்தைச் சேர்ந்த எந்தப் பந்துவீச்சாளர் வீசினாலும் சிக்ஸர், பவுண்டரி விளாச வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கினார். தான் சந்தித்த முதல் 3 பந்துகளில் மார்ஷ் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி விளாசியபோதே அவரின் நோக்கம் புரி்ந்துவிட்டது.

டி20 போட்டிகளுக்கென்று ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுடன் அணிகள் களமிறங்கும்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் டி20 சாம்பி்யன் பட்டத்தை 5 டெஸ்ட் ஸ்பெஷலிட்டுகளுடன் வென்றுள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், டேவிட் வார்னர், ஸ்வீட் ஸ்மித் ஆகிய 5 பேரும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வார்னர், மார்ஷ் இருவரின் அற்புதமான பேட்டிங்தான் காரணம். பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட், ஆடம் ஸம்ப்பா இருவரும்தான் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டு வீழ்த்தினார். ஸம்ப்பா 4ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

மிட்ஷெல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார், மேக்ஸ்வெலும் தனது பங்கிற்கு ஓவருக்கு 9 ரன்களை வழங்கினார். இருவரும் கட்டுக்கோப்பாகப்பந்துவீசியிருந்தால் இன்னும் 20 ரன்கள் குறைவாக நியூஸிலாந்து அடித்திருக்கும்.

“அக்ரஸிவ் ஆஸ்திரேலியா” என்பதை இந்தப் போட்டியி்ல் நிரூபித்துவிட்டனர்.

நியூஸிலாந்து அணியும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்தான். 172 ரன்கள்அடித்தும் டிபென்ட் செய்ய முடியவில்லையே எனும் ஆதங்கம் இருக்கும் என்பதில் நியாயம்தான். ஆனால், ஆடுகளம் சேஸிங்கிற்கு அற்புதமாக ஒத்துழைத்தது. பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்ஸ்மேன் அடிக்கும் வகையில் எழும்பு நன்றாக வந்ததால், சேஸிங் எளிதாக இருந்தது. அதனால்தான் வார்னர், மார்ஷ் எந்தபக்கம் பேட்டை சுழற்றினாலும் சிக்ஸர்,பவுண்டரி சென்றது.

ஐசிசி தொடர்கள் என்றாலே நியூஸிலாந்து அணி “அன்டர்டாக்ஸ்” என்ற ரீதியில்தான் ஒவ்வொருபோட்டியையும் கடந்து செல்கிறார்கள். 2015ம் ஆண்டு இறுதிப்போட்டி, 2019ம் ஆண்டு இறுதிப்போட்டி, 2021 இறுதிப்போட்டி என பைனலி்ல் வாய்ப்பைக் கோட்டைவிட்டுள்ளனர்.

அதிலும் 2015-50 ஓவர்கள் உலகக்கோப்பை, 2021 டி20 கோப்பையில் ஆஸ்திேரலியாவிடம்தான் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐசிசி சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மட்டுமே நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் அந்த அணியின் கேப்டன் கேன் வி்ல்லியம்ஸன் தனது பேட்டிங்கை எந்த கியரிலிருந்தும் உடனடியாக டாப் கியருக்கு மாற்ற முடியும் என்பதை நேற்று நிரூபித்தார்.

அணி்க்கு நங்கூரமிடும் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் தன்னால் அதிரடி ஆட்டத்தையும் வெளி்ப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அதிலும் ஸ்டார்க் பந்துவீச்சில் வில்லியம்ஸன் அடித்த 4 பவுண்டரி ஒருசிக்ஸர் அவரின் அதிரடி ஆட்டத்துக்கு சான்று. 48 பந்துகளில் 85 ரன்கள்(3சிக்ஸர்,10பவுண்டரி) சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார்.

கேன் வில்லியம்ஸனும் தொடக்கத்தில் நிதானமாகவே பேட் செய்தார். முதல் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே வில்லியம்ஸன் சேர்த்திருந்தார். அதன்பின் தனது பேட்டிங் உத்திய மாற்றிய வில்லியம்ஸன் அதிரடிக்கு மாறி அடுத்த 31 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை முதல் 10 ஓவர்களில் ரன் ஏதும் பெரிதாகச் சேர்க்காமல் வீணடித்துவிட்டனர். 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஆனால் கடைசி 10 ஓவர்களில்தான் அதிரடியாக ஆடி 115 ரன்கள் சேர்த்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 35 பந்துகளில் 28 ரன்களும், மிட்ஷெல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியதால் சீராக ரன்ரேட் உயர்ந்தது. பவர் ப்ளேயில் 43 ரன்கள், 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது ஆஸ்திரேலிய அணி.

நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை சுழற்பந்துவீச்சாலர் இஷ் சோதி அரையிறுதி, லீக் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிவிட்டு இறுதிப்போட்டியில் சொதப்பிவி்ட்டார். சோதி 3 ஓவர்கள் வீசி 40 ரன்களை வழங்கினார். சான்ட்னர் 3 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்தார். சவுதி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களும், மில்னே 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் என கட்டுக்கோப்பாகப் பந்துவீசத் தவறினர். போல்ட் மட்டுமே 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.

பேட்ஸ்மேன்கள் வலுவான ஸ்கோரை அமைத்துக் கொடுத்தும் அதை டிபென்ட் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள்தவறிவிட்டனர் என்றுதான் கூற முடியும்.

ஆலயம் மற்றும் தபால் நிலையம் உடைத்து நாசம்.

0

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் ஆலயம் மற்றும் லிந்துலை தபால் நிலையம் நேற்று இரவு   இனந்தெரியாதோரால் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை  பொலிஸ்  தெரிவித்தனர்.

தலவாக்கலை டயகம பிரதான வீதியில்  நாகசேனை  பகுதியில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை லிந்துலை  பொலிஸ்  மேற்கொண்டு வருகின்றனர்
பா.பாலேந்திரன்

மழையால் விவசாய நிலங்கள் அழிவு மரக்கறி விலைகள் அதிகரிப்பு மக்கள் பாதிப்பு.

0

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருகிறது இந்த மழை காரணமாக ஆறுகள் ஓடைகள், பெருக்கெடுத்துள்ளன.

இதனால் பல மரக்கறி நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பல பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாக சந்தைகளில் மரக்கறிகள் குறைவடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்த மரக்கறி விலைகள் அதிகரிப்பின் காரணமாக சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கந்தபளை, டயகம, அக்கரபத்தனை, லிந்துலை பொகவந்தலாவை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ள.இந்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரக்கறி வகைகள் வெள்ளத்தால் அல்லுண்டு செல்லப்பட்டதன் காரணமாக பெரும் அளவிலான விவசாய குடும்பங்கள் மற்றும் பாவனையாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

விவசாயத்தினை நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் தற்போது இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கம் இவர்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்.

பல்வேறு பிரச்சினைக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட வரவு செலவு திட்டம் பாராட்டுதலுக்குரியதே.

0

நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை காணப்பட்டாலும் உலகளவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதில் நூறு சதாவீதம் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் ஏனைய நாடுகளை விட எமது நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நிலையிலேயே இந்த வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எமக்கென்று எந்த விதமான வருமான வழிகளும் கிடையாது உற்பத்தியும் கிடையாது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும் இப்படியாவுது ஒரு வரவு செலவு திட்டத்தினை கொண்டுவந்திருப்பது பாராட்டுவதற்குரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிஸ் உப செயலாளருமான சச்சதாநந்தன் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

இந்த நாட்டிலே சொந்த தயாரிப்பு இல்லை.பொருளாதார பிரச்சினை அந்நிய நாடுகள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் உள்ளவர்கள் யாசகம் கேட்கவேண்டிய நிலை தான் காணப்படுகின்றன. இப்படிபப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு இன்றும் 600 தொடக்கம் 700 வரை உள்ளாகின்றன நிலையில் இந்நிலையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பது என்பதே கடினமான விடயம். வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கு முன் நாட்டின் வருமானத்தை பார்த்தால் வரல செலவு திட்டமே இருக்க முடியாது இப்படிப்பட்ட நிலையில் எதிர் தரப்பினர் மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் எதுவுமில்லை அரச ஊழியர்களுக்கு சுமை என்றெல்லாம் கூறுவது இக்காலக்கட்டத்தில் கூறுவது பொருத்தமட்டது, மலையகத்தை பொருத்த மட்டில் கடந்த நல்லாட்சி காலத்தில் மலையக மக்களுக்கு 15000 வீடுகள் என்றெல்லாம் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் எத்தனை வீடுகளை கட்டிக்கொடுத்தார்கள் அன்று யுத்தம் இருக்கவில்லை கொரோனா இருக்கவில்லை பாரிய பிரச்சினைகள் இருக்கவில்லை அந்நிய நாட்டின் உதவிகள் நிறைய இருந்தன.இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி மாத்திரம் இல்லாவிட்டால் குறிப்பிட்ட அமைச்சருமில்லை அந்த அமைச்சரின் தொழிற்சங்கமுமில்லை என அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆட்டோ சாரதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா தொற்று காரணமாக பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியது ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்கள் தான் ஆனால் அவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை லீசிங் கட்ட முடியாது பலர் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் ஆனால் அவர்கள் சார்பில் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மற்றுமொருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையினை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பாக எவ்வித விளக்கமும் இல்லை என தெரிவித்தார்.3

கே.சுந்தரலிங்கம்.

ஐயப்பன் யாத்திரை செல்ல இலவச வீசா!

0

ஐயப்பன் யாத்திரை செல்வதற்கான இலவச வீசா வழங்குவதற்கான ஏற்பாட்டை இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20.05.2021 அன்று இந்து கலாச்சார அலுவலக்கத்தில் இடம்பெற்ற ஐயப்பன் குருமார்களுக்கான கலந்துரையாடலின் போது, கொவிட் தொற்று காலப்பகுதியில் ஐயப்பன் யாத்திரை செல்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும்,விசா பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானம் செயலாளர் திரு. கணேஷமூர்த்தி ,அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ரவிசாமி மற்றும் அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினரால் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, செந்தில் தொண்டமான் அவர்கள் இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார், இப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் இலவச வீசாவினை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

மேலும் ஒப்புதல் கடிதம் வழங்கியதை தொடர்ந்து ஐயப்பன் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வீசா வழங்கவதற்கான பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இலவச வீசா வழங்குவற்கான ஏற்பாடுகளை செய்து தந்தமைக்காக அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக புஸ்ஸலாவ நயப்பன தோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

0

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் இன்றைய தினமும் (14.11.2021) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பசறையில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

0

பசறை மடுல்சீமை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 75 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட நால்வரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவை என மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.

0

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவை என நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டு தொடர்பான ஆணைக்குழுவிடம் மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச நியதிகள் தேவையென மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவிடமே இம்மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவின் ஆணையாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம்பெற்று வரும் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மற்றும் அக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மலையக மக்களின் தனித்துவமான அடிப்படை பிரச்சினைகள் என்ற ரீதியிலும் தீர்வுகளை வலியுறுத்தி ஆணைக்குழுவிடம் பூர்வாங்க அறிக்கையினையும் கையளிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது முன்வைக்கபட்ட சாட்சியங்கள் மற்றும் பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு:

● இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இனியும் காலம் தாழ்த்தாமல் நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்படல் வேண்டும்.

● உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வரும்போது இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளும் சமூக அந்தஸ்தும் யாப்பு ரீதியாக உறுதிப் படுத்தப்படல் வேண்டும். அதில் மலையக மக்களுக்கு தனியான தேசிய இனம் என்ற அடையாளத்துடன் அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும்.

● மனித உரிமைகள் சார்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இனம், தேசியம், மதம், மொழி, நிறம், கலாச்சாரம், பிரதேசம், பால், வயது, உடல் உள வலு ரீதியான பாகுபாடுகளற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும். சகலருக்கும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் சட்டத்தின் முன் சமநிலை, கருத்து சுதந்திரம், கல்வி பண்பாடு, விரும்பும் தொழிலை செய்யவும், விரும்பும் இடத்தில் வசிக்கும் உரிமைகள் போன்ற அனைத்தும் அரசியல்யலைமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

● உத்தேச தேர்தல் முறைமைகள் தொடர்பான யோசனைகளில் சிறுபான்மை சமூகங்களின் விகிதாச்சார, கலப்பு பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி நிர்ணயத்தில் ஜனநாயக ரீதியான அங்கத்துவம் என்பன பாரபட்சமின்றி உறுதி செய்யப்படல் அவசியம்.

● அதிகார பரவலாக்கம் என்ற விடயத்தில் மாகாணம், மாவட்டம் மற்றும் உள்ளூராட்சி தொகுதிகளில் காணப்படும் சமத்துவமின்மை நீக்கப்படுவதோடு நிர்வாகம், அபிவிருத்தி என்பனவற்றில் சகலருக்கும் ஏற்ற வகையில் நிலையான கொள்கைகள் அவசியம்.

● இந்திய இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் குறைந்த பட்ச தீர்வாக 13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடன் துரிதமாக தேர்தல்களை நடாத்த வேண்டும்.

● மலையக மக்களின் குடியிருப்பு, புதிய கிராமங்கள் அடிப்படையிலான வீடமைப்பு,குடிநீர் வசதி, சுகாதாரம் , போக்குவரத்து, காணி, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, (தனியான பல்கலைக்கழகம்) வர்த்தகம், கைத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் சமூக நலன்கள் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவான நிரந்தர தீர்வுகள் வேண்டும்.

● தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள், தொழில் சம்பந்தமான ஏனைய உரிமைகள், மாற்றுப் பயிர் செய்கை, மலையக மக்கள் கட்டம் கட்டமாக சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றம் காண்பது, சிறு குறு கைத்தொழில் முயற்சிகள்கள், கால்நடை வளர்ப்பு, மற்றும் ஏனைய கைத்தொழில் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

● மலையக இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்புடன் சமூக பொருளாதார நிலைகளில் தேசிய மட்டத்தில் ஏனைய சமூகங்களுடன் சமமான செயற்பாடுகள் மூலமாக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்.

● தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்ட வீடமைப்பு அமைச்சுக்கு மீண்டும் கெபினெட் அந்தஸ்து மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சினை மீண்டும் உருவாக்க வேண்டும்.

● தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விரைவான தீர்வு மற்றும் காரணமின்றி மலையக இளைஞர்கள் நகர்ப்புறங்களில் கைதாவதை தடுத்து நிறுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மலையக இளைஞர்களுக்கும் சம வாய்ப்புகள் உருவாக்கப்படல் அவசியம்.

● சிறுவர் துஷ்பிரயோகம், வயது குறைந்தோர் வீடுகளில் வர்த்தக நிலையங்களில் வேலைக்கர்த்தலை தடுத்தல் மற்றும் முதியவர்கள் தொடர்பான சமூக நலன்கள் குறித்து விஷேட கவனம்செலுத்த வேண்டும்.

● இனக் கலவரம் மற்றும் யுத்த பாதிப்புகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான தெளிவான கொள்கையும், இந்தியா அகதிகள் முகாம்களிலும் வெளியிலும் வாழும் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களின் விருப்பங்களை அறிந்து ராஜதந்திர தூதரக மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.

● மலைநாட்டுக்கு வெளியே வட மாகாணத்தின் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் நிர்வாகம், அபிவிருத்தி சார்ந்த உரிமைகள் தொடர்பாக ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

● நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளியினர் சார்பாக ஒரு நிர்வாக அலகு ஏற்படுத்தல் அவசியம். இந்தியாவில் ‘பாண்டிச்சேரி’ போன்ற பிரதேச எல்லைகளைக் கொண்டிராத மாநில நிர்வாக அதிகாரம் கொண்ட முதலமைச்சர், அமைச்சரவை முறைமையிலான சுயாட்சி நிர்வாகம் பற்றிய ஒரு பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளையில் ஏனைய சமூகங்களும் அமைச்சரவையில் இடம்பெறலாம்.

● வடகிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் பூர்வீக மக்களுக்கு மீளக்கையளிக்க வேண்டும். போரில் உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்த உரிமைகள் வழங்க வேண்டும். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.

● மலையக மக்களின் பல்வேறு அபிவிருத்திகள் சார்ந்த அதிகார சபை மற்றும் பொது நிதியம் ஊடாக சேவைகளை ஆற்றிட அரசியல் பாகுபாடுகள் இல்லாத பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

பூர்வாங்க அறிக்கைக்கு மேலதிமாக சாட்சியங்களின் போது மேலோட்டமாக ஆராயப்பட வேண்டும். ஏனைய விடயங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையினை சமர்பிப்பதற்கும் ஆணைக்குழுவில் இணக்கம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 நீலமேகம் பிரசாந்த்